பாக்யராஜுக்கு காதலியாக நடித்த ஆர்த்தி ரவியின் அம்மா.. என்ன படம் தெரியுமா?.. கஸ்தூரி ஓபன் டாக்
சென்னை: இந்தியாவின் சிறந்த இயக்குநரான பாக்யராஜ் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இழப்பும், அவரது குருநாதர் பாரதிராஜாவின் இழப்பும் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில் பாக்யராஜ் குறித்து நடிகை கஸ்தூரி சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இயக்குநர், ஹீரோ, இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டவர் பாக்யராஜ். ஏகப்பட்ட ஹிட் படங்களை இயக்கி தலைமுறைகள் கடந்தும் ஜொலித்தவர். உடல்நல ஆரோக்கியத்தோடு இருந்த அவர்; கடந்த வாரத்தில் நடந்த குஷ்புவின் மகள் திருமணத்துக்கு சென்றுவிட்டு திரும்பினார். அதற்கு ஒரு நாள் கழித்து காலை நடை பயிற்சி செய்த பிறகு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது.

குருநாதர் இறந்த 2 வாரங்கள்: பாரதிராஜா இறந்த இரண்டே வாரங்களில் பாக்யராஜும் மண்ணைவிட்டு பிரிந்துவிட்டார். முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பாக்யராஜின் பிரிவு பலரையும் கண்ணீர் சிந்த வைத்தது. இந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாக்யராஜ் குறித்து பேசியிருக்கிறார்.
பாக்யராஜ் பற்றி கஸ்தூரி பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "கடந்த மூன்று நாட்களாக பாக்யராஜ் படமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். மாதுரி தீட்சித்தை சூப்பர் ஸ்டாராக்கிய படமே பாக்யராஜின் எங்க சின்ன ராசா படத்தின் ஹிந்தி ரீமேக்தான். ராசுக்குட்டியையும் ஹிந்தியில் ரீமேக் செய்தார்கள். நாங்கள் ஹிந்தி க்ரூப்போடு படம் பார்க்க செல்லும்போது பாக்யராஜின் பெயர் வரும்போது நாங்கள் கை தட்டுவோம். அப்போதே ஏஐ இல்லாமல் அவசர போலீஸ் திரைப்படத்தை எடுத்தார்.
ஆர்த்தி ரவியின் அம்மா: நான் பாக்யராஜின் தீவிரமான ரசிகை. என் மகளுக்கு நான் பாக்யராஜுடைய படங்களைத்தான் காண்பித்தேன். சமீபத்தில்கூட அவருடைய விடியும் வரை காத்திரு திரைப்படத்தை பார்த்தேன். அதில் ஒரு முக்கியமான ஆள் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் பாக்யராஜின் காதலி, பாக்யராஜுக்கே துரோகம் செய்பவர் யார் தெரியுமா?.. ரவி மோகனின் மாமியாரும், ஆர்த்தி ரவியின் அம்மாவுமான சுஜாதா விஜயகுமார்தான். இத்தனை நாட்கள் இதை தெரிந்துகொள்ளாமல் இருந்தோமே என்று தோன்றுகிறதே. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அதற்கு சொல்கிறேன். நீங்களே அதை புரிந்துகொள்ளுங்கள்.
பாக்யா இதழ்: அதேபோல் அவர் நடத்திய பாக்யா இதழ்தான் ஜனரஞ்சகமான இதழ். அதில் அவசர போலீஸ் உள்ளிட்ட கதைகள் எல்லாம் தொடராக வந்தன. அதேபோல் பாக்யராஜும், பூர்ணிமாவும் எங்கே போனாலும் அவ்வளவு ஒற்றுமையாக போவார்கள். அப்படிப்பட்ட பூர்ணிமாவை அன்று அழுது பார்க்க முடியவில்லை. எல்லோர் வீட்டிலும் இழப்பு இருக்கிறது. ஆனால் சிலருக்குதான் இறப்பு இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications
