விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் எப்போது?.. பிரியாமணி விளக்கம்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ்
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டியது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸாகவில்லை. ஒருவழியாக பல பிரச்னைகளை கடந்து சில நாட்களுக்கு முன்பு ஏ சான்றிதழ் அப்படத்துக்கு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து நடிகை பிரியாமணி விளக்கமளித்திருக்கிறார்.
ஜனநாயகன் திரைப்படம் தமிழ் திரைத்துறையின் ஹெட்லைன்ஸாக இருக்கிறது. முதலில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனவரி மாதத்தி ரிலீஸாகியிருந்திருக்க வேண்டிய படம் தள்ளிப்போனது. அதனையடுத்து நீதிமன்றத்துக்கெல்லாம் படக்குழு சென்றது. இருப்பினும் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. எனவே வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு மறுதணிக்கைக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதும் அதிகாரிகள் படத்தை பார்க்காமல் இழுத்தடித்தார்கள்.

லீக்கான படம்: இப்படி கிடப்பில் கிடந்த படம் திடீரென இணையத்தில் லீக்காகிவிட்டது. ஒட்டுமொத்த இந்திய துறையும் இந்த விஷயத்தில் அதிருப்தியையும், வேதனையையும் தெரிவித்தது. மொத்தம் ஆறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். எவ்வளவு களேபரம் நடந்தாலும் எதற்கும் விஜய் இறுதிவரை வாய் திறக்கவில்லை. முழு கவனத்தையும் முதலமைச்சர் நாற்காலி மீது வைத்து அதை அடைந்தும் விட்டார் அவர்.
படத்துக்கு ஏ சான்றிதழ்: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ஒருவழியாக சர்ட்டிஃபிக்கேட் கிடைத்துவிட்டதால் பெரிய பாரத்தை இறக்கி வைத்தது மாதிரியான உணர்வில் இருக்கிறது படக்குழு. இனிமேல் எதுவும் தடை இல்லை என்பதால் ரிலீஸுக்கான வேலைகள் பரபரக்க தொடங்கியிருக்கின்றன. அநேகமாக இந்த மாதத்துக்குள்ளேயே ரிலீஸ் செய்ய வாய்ப்புகள் அதிகம் என்றும் கருதப்படுகிறது.
பிரியாமணி பேட்டி: இந்நிலையில் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கும் நடிகை பிரியாமணி ரிலீஸ் குறித்து பேசுகையில், "ஜனநாயகன் திரைப்படம் இந்த மாதம் ரிலீஸாகுமா இல்லை அடுத்த மாதம் ரிலீஸாகுமா என்பதை விரைவில் உறுதி செய்து அறிவிப்போம். எல்லோரும் சொல்வதை போன்றே; முதலமைச்சர் பொறுப்புக்காகவே விஜய் பிறந்தவர் என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சராக அவர் சிறப்பாக செயல்படுகிறார். பிறவியிலேயே ஒரு சிறந்த தலைவர் அவர்" என்றார்.
மொத்தம் 13 இடங்களில் கட்: முன்னதாக, ஜனநாயகன் படத்தில் மொத்தம் எத்தனை இடங்களுக்கு சென்சார் குழு கட் சொல்லியிருக்கிறது என்ற விவரங்களும் நேற்று வெளியாகின. அதன்படி வன்முறை காட்சிகள், ரத்த கறை உள்ளிட்டவைகளை எல்லாம் சேர்த்து மொத்தம் 13 இடங்களில் தணிக்கை அதிகாரிகள் கட் சொல்லியிருக்கிறார்களாம். அவர்கள் சொன்ன கட்டுகளுக்கு படக்குழுவும் ஓகே சொல்லிவிட்டதாம். ஆகமொத்தம் அடுத்த மாத இறுதிக்குள் ஜனநாயகன் ரிலீஸாவது உறுதியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications
