ரஜினி முகத்தில் காறி துப்பிய ஸ்ரீதேவி.. வைரமுத்து பகிர்ந்த சுவாரஸ்யம்.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதியும், திரைக்கதை மன்னன் பாக்யராஜ் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதியும் உயிரிழந்தார்கள். இரண்டு பேரையும் ஒரே மாதத்தில் இழந்ததால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது. இன்னும் அவர்களது இழப்பிலிருந்து பெரும்பாலானோர் மீளவில்லை. இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக 16 வயதினிலே திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்தார் பாக்யராஜ். அதற்கு பிறகு கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களில் வேலை பார்த்து வேலையும் கற்றுக்கொண்டு; பாரதிராஜாவுக்கும் உறுதுணையாக இருந்தார். பிறகு அவரிடமிருந்து விலகி இயக்குநராகவும், ஹீரோவாகவும் ஜொலித்து தனது குருநாதர் மாதிரியே புகழடைந்தார்.

இரண்டு பேரும் மரணம்: சூழல் இப்படி இருக்க இயக்குநர் இமயம் பாரதிராஜா கடந்த மாதம் பத்தாம் தேதி உயிரிழந்தார். அவர் உயிரிழந்த இரண்டே வாரங்களில் சிஷ்யர் பாக்யராஜும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார். இரண்டு ஜாம்பவான்களை ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இழந்த அதிர்ச்சியிலிருந்து பலரும் மீளவில்லை. அந்தவகையில் கவிப்பேரரசு வைரமுத்து பாரதிராஜா, பாக்யராஜ் குறித்தும்; ரஜினி குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
வைரமுத்து பதிவு: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "16 வயதினிலே படப்பிடிப்பு
சப்பாணியை அடித்த
பரட்டையை
ஸ்ரீதேவி திட்டித் தீர்க்கும் காட்சி
பேசிமுடித்து
ரஜினி முகத்தில்
காறித் துப்ப வேண்டும்
அந்தக் கற்றைக்காகத்
தயாரித்து வைத்திருந்த
சோப்பு நுரை
பலமுறை எடுத்தும்
முகத்தில் சரியாகப் படியவில்லை
'உண்மையாகவே
காறித் துப்புங்கள்' என்கிறார் ரஜினி
'ஐயோ மாட்டேன்' என்று
ஶ்ரீதேவி அலறி ஓடிவிடுகிறார்
'காட்சி
உயிர்ப்போடு வரவேண்டும்;
நீங்களே துப்புங்கள்' என்கிறார்
பாரதிராஜாவிடம் ரஜினி
அவர் தயங்கித் தயங்கி
ரஜினியின் முகத்தில்
குப்பென்று அப்பும்படி
காறித் துப்புகிறார்
பார்வையாளர்
முகத்திலும் படியும்படி
காட்சி
துடிப்போடு பதிவாகிறது
ரஜினியைக் கட்டிப்பிடித்துக்
கைக்குட்டையால் முகம்துடைத்துக்
கண்ணீர் சிந்துகிறார் பாரதிராஜா
இதைப் பக்கத்திலிருந்து
பார்த்தவர் பாக்யராஜ்
அவரது சுயசரிதைக்கு
முன்னுரை எழுதிமுடித்தேன்;
அதில் பதிவாகியிருக்கும்
சம்பவம் இது
நடிப்பு என்பது நடிப்பல்ல;
அர்ப்பணிப்பு" என குறிப்பிட்டிருக்கிறார்.
அவரது இந்தப் பதிவு அனைவரிடமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ரஜினிகாந்த் இப்போது இருக்கும் உச்ச இடத்துக்கு காரணம் இது மாதிரியான அர்ப்பணிப்பு மட்டும்தான். இப்போதுள்ள நடிகர்கள் பல விஷயங்களை சூப்பர் ஸ்டாரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். மேலும், ரஜினியின் அர்ப்பணிப்பை பார்த்து பாரதிராஜா கண்ணீரே விட்டிருக்கிறார் என்றால்; அது எவ்வளவு ரியலாக எடுக்கப்பட்டிருக்கும் எனவும் ஆச்சரியப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications
