Gatta Kusthi 2 Day 2 Public Review - கட்டா குஸ்தி 2 பப்ளிக் விமர்சனம்.. இரண்டாவது நாளும் சூப்பர்
சென்னை: செல்லா அய்யாவு இயகக்த்தில் விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவரே ஹீரோவாக நடித்திருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படம் நேற்று முன்தினம் (ஜூலை 3) ரிலீஸானது. முதல் நாளில் படத்துக்கு ரசிகர்களிடமிருந்து ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. அதே ஆதரவு இரண்டாவது நாளான நேற்றும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு படத்துக்கு இருந்தது. இந்நிலையில் நேற்று படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை ஷேர் செய்திருக்கிறார்கள்.
விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாகவும் நடித்திருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படம் நேற்று முன்தினம் ரிலீஸானது. அதற்கும் முதல் நாள் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதிலேயே படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். படம் பார்த்த பத்திரிகையாளர்கள் பாசிட்டிவ்வான கமெண்ட்ஸையே எக்ஸ் தளத்தி பகிர்ந்தார்கள்.

வசூலிலும் சூப்பர்: அந்த ஹைப்போடு தியேட்டருக்கு வந்த படத்தை ரசிகர்களும் சென்று பார்த்தார்கள். அவர்களுக்கும் படம் ரொம்பவே பிடித்துவிட்டது. இதனால் முதல் நாள் முடிவில் படம் இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாய்வரை வசூலித்தது. அதையடுத்து இரண்டாவது நாளான நேற்று 4 கோடி ரூபாய்க்கும் வசூலித்து மொத்தம் 7 கோடி ரூபாய்க்கும் மேல் இரண்டு நாட்களில் அள்ளியிருக்கிறது. இந்நிலையில் நேற்று தியேட்டருக்கு சென்று படம் பார்த்த ரசிகர்களும், ரசிகைகளும் தங்கள் விமர்சனத்தை ஷேர் செய்திருக்கிறார்கள்.
பப்ளிக் விமர்சனம்: படம் பார்த்த ஒரு ரசிகர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிடம் பேசியபோது, "எனது மகளுக்காகத்தான் இந்தப் படத்துக்கு வந்தேன். அவருக்கு படம் பிடித்திருக்கிறது. பெண் சாதிப்பதற்கு ஆண் துணையாக இருக்கிறார். படத்தை அருமையாக செய்திருக்கிறார்கள். பாடல்களும் குழந்தைகளை கவரும்படியாகவே இருக்கின்றன.மொத்தத்தில் படம் சூப்பராக இருக்கிறது" என்று புகழ்ந்தார்.
தரமாக இருக்கிறது: இன்னொரு ரசிகர் சொல்கையில், 'படம் சூப்பராக இருக்கிறது. முதல் பாகம் போன்றே இதுவும் அருமை. டீச்சராக வரும் மோஷா வேற லெவலில் நடித்திருக்கிறார். எல்லோருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள். கருணாஸ் தரமாக செய்துவிட்டார். விஜய் ரெஃபரன்ஸ் எல்லாம் சூப்பராக இருக்கிறது. நிச்சயம் படத்தை தாராளமாக பார்க்கலாம்' என குறிப்பிட்டார்.
ரசிகையின் கருத்து: இவர்களைத் தொடர்ந்து இளம் ரசிகை பேசுகையில், "படம் அருமையாக இருந்தது. முதல் பாதியை விடவும் இரண்டாவது பாதி சூப்பர். பெண்களை பெரும்பாலான படங்களில் குறைத்துதான் காண்பிப்பார்கள். இதில் அப்படி இல்லை. அந்த குழந்தை நட்சத்திரம் சூப்பராக நடித்திருந்தார். ரம்யா கிருஷ்ணன் ரோல் கேமியோவாக இருந்தாலும் ஸ்ட்ராங்காக இருந்தது. அனைத்து தரப்பினருக்கும் இந்தப் படம் பிடிக்கும். பெண்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.
கீழே இறக்கக்கூடாது: அவருக்கு பிறகு பேசிய இளம் ரசிகர், 'வீட்டு வேலை செய்யும் ஹவுஸ் ஹஸ்பெண்ட்களை மட்டப்படுத்தக்கூடாது. வீட்டு வேலைகளை செய்வதால் ஆண் மட்டம் கிடையாது என்பதை சொல்லியிருக்கிறார்கள். குழந்தை பிறந்தால் அடுத்தக்கட்டத்துக்கு ஒருவரால் போக முடியாது என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் இதில் பாப்பா பிறந்த பிறகும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்கிறார். அந்தப் பெண்ணுக்கு கணவராக முழு சப்போர்ட் செய்கிறார். ஃபேமிலியாக இருப்பவர்களுக்கு சூப்பராக கனெக்ட் ஆகும்" என்றிருக்கிறார். இப்படி இரண்டாவது நாளும் மக்கள் மத்தியில் படத்துக்கு சூப்பர் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்திருப்பதால் படக்குழு நிம்மதியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
