சி.எம் விஜய் ஃப்ரெண்ட்னா சும்மாவா?.. முடி வெட்டும்போது கூட கால் மேல் கால்.. சிக்கினார் சஞ்சீவ்

சென்னை: முதலமைச்சர் மற்றும் நடிகரான விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ். மெட்டி ஒலி, திருமதி செல்வம் என ஹிட் சீரியல்களில் நடித்த அவர்; பத்ரி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியிருப்பது மட்டுமில்லாமல்; அவரது ஆட்டிட்யூட் விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறது.

நடிகராக இருந்த விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகியிருக்கிறார். அவர் இப்படி ஒரு சரித்திர சம்பவத்தை செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன் பாதி தவெகவினரே நினைக்கவில்லை. இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் அவர்தான் காவலன். ஆனால் அந்தக் காவலனுக்கு நட்பு வட்டம் ரொம்பவே சுருக்கமான ஒன்று ஆகும்.மொத்தமே அவர்கள் கேங்கில் ஐந்து பேருக்குள்தான் இருப்பார்கள். அவர்களில் இரண்டு பேர் திரைத்துறையில் இருக்கிறார்கள்.

CM Vijay s Friend Sanjeev Trolled Over Viral Saloon Video - Netizens React To His Attitude
Photo Credit:

விஜய் நண்பர் சஞ்சீவ்: ஒருவர் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ். இன்னொருவர் நடிகர் ஸ்ரீநாத் (இப்போது அமைச்சர்). இந்த இரண்டு பேரில் சஞ்சீவ்தா விஜய் மாதிரியே இருப்பார். அவரது நடிப்பு, பேச்சில்கூட விஜய்யின் சாயல் எட்டி பார்க்கிறது என்ற விமர்சனங்களும், கிண்டல்களும் எழுந்தது உண்டு. ஏன் விஜய்யேகூட ஒருமுறை சஞ்சீவ்விடம், 'நீ நடிப்பது என்னை மாதிரியே இருக்கிறது. நானே ஒரு வருடத்துக்கு ஒரு படம்தான் செய்கிறென். உன்னை ஏதாவது சொல்லப்போகிறார்கள்' என எச்சரித்திருக்கிறார்.

Also Read
ஹீரோயின் பாக்யராஜ் மறைவுக்கு ஏன் வரவில்லை?.. அந்த சக்தி இல்லை.. விளக்கம் கொடுத்த ஊர்வசி
ஹீரோயின் பாக்யராஜ் மறைவுக்கு ஏன் வரவில்லை?.. அந்த சக்தி இல்லை.. விளக்கம் கொடுத்த ஊர்வசி

சஞ்சீவ்வின் கரியர்: சஞ்சீவ்வை பொறுத்தவரை வெள்ளித்திரையில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருப்பவர்தான். ஆனாலும் அவருக்கு இன்னும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அதேசமயம் சின்னத்திரையில் அவர் கெத்தாக வலம் வருபவர். மெட்டி ஒலி, திருமதி செல்வம் உள்ளிட்ட ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவர்; பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனிலும் கலந்துகொண்டிருந்தார்.

சினிமாவில் சஞ்சீவ்: அவர் சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி, புதிய கீதை, மாஸ்டர், யானை, சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் படங்களில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்கள் அப்படி ஒன்றும் அவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்துவிடவில்லை. விரைவில் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துவிட வேண்டும் என்று இன்றும் தீவிரமாக உழைத்துவருகிறார் அவர்.

சஞ்சீவ் வீடியோ: இந்நிலையில் சஞ்சீவ் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது, தன்னுடைய முடியை திருத்தி கொள்வதற்காக சலூன் கடைக்கு சென்றார். அங்கே அவர் சேரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனக்கு எப்படி முடி திருத்த வேண்டும் என சொல்கிறார். இதை பார்த்த நெட்டிசன்களோ, 'முதலமைச்சருடைய ஃப்ரெண்ட்னா சும்மாவா? அதனால்தான் முடி வெட்டும்போதுகூட இப்படி ஆட்டிட்யூட் காண்பிக்கிறார்' என சொல்லி; ட்ரோல் ஏரியாவில் அவரை அட்மிட் செய்ய தொடங்கிவிட்டார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X