ரெண்டு பிள்ளைக்கு அம்மாவான பிறகும் குறையாத அழகு.. நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட பிரணீதா சுபாஷ்!
சென்னை: 'வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா...' என்ற பாடலுக்கு மிகக்கச்சிதமான அழகுடன் தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளையடித்தவர் தான் நடிகை பிரணீதா சுபாஷ். திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும், கொஞ்சமும் இளமை குறையாமல் படு கிளாமராக நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அப்லோடு செய்துள்ளார்.
சினிமா என்ட்ரி: கடந்த 2010-ல் வெளியான தெலுங்குப் படமான 'போக்கிரி'யின் கன்னட பதிப்பான 'போர்கி' படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தவர் பிரணீதா சுபாஷ். அதனைத் தொடர்ந்து 'எம் பில்லோ எம் பிள்ளடோ', 'பாவா' என தெலுங்கு படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பின் தெலுங்கு, கன்னடத்தில் கொடிகட்டிப் பறந்தார். அதன் பின் தமிழில் 'உதயன்' படம் மூலம் அறிமுகமாகி, கார்த்திக்கு ஜோடியாக 'சகுனி' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். பின் சூர்யா நடித்த மாஸ் படத்திலும், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இவருக்கு அடுத்தடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதும், பெயர் சொல்லும் அளவிற்கு எந்த படமும் இல்லாதால் பட வாய்ப்புகள் குறைந்தது.

குறையாத அழகு: படங்கள் இல்லாததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக நினைத்த பிரணீதா சுபாஷ், தனது நீண்ட நாள் காதலரான பெங்களூரு தொழிலதிபர் நிதின் ராஜூவை 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் ஒரு சில படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த இவர், 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் குழந்தைகளை பெற்றேடுத்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும் தகுந்த உடற்பயிற்சி மூலம் தனது உடலமைப்பை மிகவும் கச்சிதமாகப் பராமரித்து வருகிறார்.
நீச்சல் குளத்தில் ஆட்டம்: தற்போது சோஷியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் பிரணீதா, நீச்சல் உடையில் தனது குழந்தையை நீச்சல் குளத்தில் நீந்தக் கற்றுக்கொடுத்துக் கொஞ்சி விளையாடும் வீடியோவையும், மற்றொரு பக்கம் சோபாவில் சாய்ந்து கொண்டு படு கிளாமராகக் கொடுத்த போட்டோஷூட் படங்களையும் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவான பிறகும் என்ன ஒரு அழகு " என கமெண்ட்களைக் அள்ளித் தெளித்து லைக்ஸ்களைக் குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
