ரோஜா மகனுக்கு 20 வயதா?.. களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்.. யப்பா வேற லெவல்
சென்னை: 90களில் தமிழ் சினிமாவின் ஃபேமஸான நடிகைகளில் ஒருவர் ரோஜா. ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர்; இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இன்று அவரது மகன் தனது 20வது பிறந்தநாளை கொண்டாடினார்
ஆர்.கே.செல்வமனி இயக்கிய செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரோஜா. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த சூரியன், உழைப்பாளி, இந்து, வீரா, அசுரன், ராசைய்யா என பல படங்கள் மெகா ஹிட்டடித்தன. இதனால் குறுகிய காலத்திலேயே கோலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறினார். தமிழில் அவருக்கு மார்க்கெட் வளர்ந்தது போன்று தெலுங்கிலும் அவருக்கான மார்க்கெட் உயர்ந்தது. இதனால் அங்கேயும் கொடி கட்டி பறந்தார்.

செல்வமணியுடன் திருமணம்: இதற்கிடையே செம்பருத்தி திரைப்படத்தில் நடித்தபோதே ஆர்.கே. செல்வமணியுடன் ரோஜாவுக்கு காதல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக தீவிரமாக காதலித்த அவர்கள்; கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்த பிறகு நடிப்பில் மட்டுமின்றி அரசியலிலும் தனது கவனத்தை செலுத்தினார். அதற்கு பலனும் கிடைத்தது.
மீண்டும் வந்த ரோஜா: அரசியல் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர்; இப்போது மீண்டும் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். அதன்படி லெனின் பாண்டியன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் நடுவராக வருகிறார். நீண்ட வருடங்கள் கழித்து கேமராவுக்கு முன்பு ரோஜாவை அடிக்கடி பார்ப்பதால் அவரது ரசிகர்கள் பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
ரோஜா பிள்ளைகள்: ரோஜாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மகள் அன்ஷுமல்லிகா சமீபத்தில்தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற இண்டியானா பல்கலைக்கழகத்தில் உயரிய விருதான ஹெர்மன் பி வெல்ஸ் என்ற விருதை பெற்றார். அது பலரிடமும் பாராட்டை பெற்றது. தங்கள் மகள் அந்த விருதை பெற்றதை நினைத்து செல்வமணியும், ரோஜாவும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மகன் பிறந்தநாள்: அவர்களுக்கு அடுத்த சந்தோஷமாக இன்று மகன் கௌஷிக் 20வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி வீட்டில் பிறந்தநாள் விழா களைகட்டியது. கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்ட அந்த விழாவில் ரோஜாவின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டார்கள். தன் மகனுக்கு வெளிட்டிருக்கும் வாழ்த்தில், "என் அன்பு மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
அழகான மனிதர்: நீ அழகான மனிதராக வளர்ந்திருப்பதை பார்ப்பதே எனது வாழ்க்கையின் பெரிய மகிழ்ச்சி. நல்ல உடல்நலம், மகிழ்ச்சி, வெற்றி, வாய்ப்புகள் அனைத்தையும் கடவுள் உனக்கு வழங்க வேண்டும். எப்போதும் பணிவுடனும், அன்பாகவும் இரு. உனது கனவுகளை தன்னம்பிக்கையுடன் துரத்து. அவை நிச்சயம் நனவாகும். உனக்கு எவ்வளவு வயதானாலும் நீ எப்போதுமே எனக்கு குழந்தைதான்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
