'பெத்த உசுரு ரத்த உசுரு'... அம்மாவை பிடிக்கும் எல்லோருக்கும் இந்த பாடல் பிடிக்கும்!
சென்னை: துலாம் படத்தின் இசை குறுந்தகட்டை வெளியிட்டு படக்குழுவினரை நடிகை சோனியா அகர்வால் பாராட்டினார்.
வி மூவி சார்பில் விஜய் விகாஸ் தயாரித்து இயக்கும் படம் 'துலாம்'. இன்றைய மாணவர்கள் போதை கலாச்சாரத்தால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற மையக்கருவை கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு அலெக்ஸ் பிரேம்நாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை குறுந்தகட்டை நடிகை சோனியா அகர்வால் வெளியிட்டார். பாடல்கள் அனைத்தையும் கேட்ட அவர், இசையமைப்பாளரை வாழ்த்தினார்.
அம்மாவை பற்றிய 'பெத்த உசுரு ரத்த உசுரு' பாடலை மிகவும் ரசித்த சோனியா, அன்னையை நேசிக்கும் அனைவருக்கும் இப்பாடல் பிடிக்கும் என பாராட்டினார்.
[ரஜினி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி]
இப்படத்தைப் பற்றி இயக்குனர் விஜய் விகாஸ் கூறியதாவது,
" இந்தப் படத்தின் கதைக்கரு இன்றைய மாணவர்கள் போதை கலாச்சாரத்தால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற மையக்கருவை கொண்டது.அதே சமயம் இன்று சட்டம் என்பது எப்படி இருக்கிறது என்பதை பற்றியும் படம் பேசுகிறது.

சமூகத்தில் இன்று சாமானிய மக்கள், அப்பாவிகள் சட்டத்தினால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றியும், அந்தஸ்தில் உள்ளவர்கள் சமூகத்தில் பெரும் குற்றங்கள் செய்துவிட்டு எளிதாக அதிலிருந்து எப்படி தப்பித்து கொள்கிறார்கள் என்பதை எடுத்துரைக்கிறது.
இப்படத்தில் நாயகனாக விவாத் ,நாயகியாக ஜெயஸ்ரீயும் நடித்துள்ளனர். இவர்களுடன் மனோபாலா, சிவா பொன்னம்பலம்,மணிமாறன்,அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ளனர்", என அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











