சஷி பட ப்ரோமோஷனில் சுரபி எடுத்த க்யூட் போட்டோஸ்!

ஹைதராபாத் : நடிகை சுரபியின் நடிப்பில் உருவாகி இருக்கும் சஷி திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது.

ஹீரோவாக தெலுங்கு நடிகர் ஆதி நடித்திருக்க ரொமாண்டிக் காதல் திரைப்படமாக உருவாகி இருக்கிறது

பிறந்தநாளன்று சர்ப்ரைஸ் புரொபஸல்.. சந்தோஷத்தில் ’பிகில்’ நடிகை.. காதலருடன் விரைவில் திருமணம்!.

இந்த நிலையில் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் சஷி திரைப்படத்தின் ப்ரமோஷனில் கலந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சுரபி.

தெலுங்கு மொழிகளில்

தெலுங்கு மொழிகளில்

அமைதியான குணம் ஆரவாரம் இல்லாத நடிப்பு கவர்ச்சி காட்டாத காட்சிகள் என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சுரபி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அனைவரும் விரும்பும் சிறந்த நடிகைகளில் ஒருவராக உள்ளார். விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட சுரபி அதன்பின் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார்.

விமர்சன ரீதியாக

விமர்சன ரீதியாக

வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு கதாபாத்திரம் மட்டுமே நடித்திருந்தாலும் வரும் அனைத்து காட்சிகளிலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்ற இவர் தமிழில் கடைசியாக புகழ் படத்தில் நடித்திருந்தார். ஜெய் இதில் இவருக்கு ஜோடியாக நடித்திருக்க படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வெற்றிம் பெற்றது.

சஷி

சஷி

பீருவா,எக்ஸ்பிரஸ் ராஜா ,அட்டாக், ஓக்க க்சனம், வோட்டர் என குறிப்பிடக்கூடிய பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் மிகவும் பிரபலமாக உள்ள சுரபி இளம் நடிகர்கள் முன்னணி நடிகர்கள் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து திரைப்படங்களிலும் நடித்து வர இப்பொழுது இளம் நடிகர் ஆதிக்கு ஜோடியாக சஷி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பொம்மை போல

பொம்மை போல

இந்த படம் வரும் பிப்ரவரி 12 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்க திகட்டாத ரொமாண்டிக் காதல் திரைப்படமாக உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் சீனிவாசராவ் நாயுடு இயக்கியுள்ளார்.ஸ்ரீ ஹனுமான் மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்க ப்ரமோஷன் பணிகள் விறு விறு வேகத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுரபி லாவண்டர் நிற பாவாடை சட்டையில் கண்ணைப் பறிக்கும் அழகில் பார்க்க பொம்மை போல இருக்கிறார். மனதை கொள்ளை கொள்ளும் சுரபியின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: surabhi சுரபி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X