கேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி!

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் த்ரில்லர் படத்தில் டாப்ஸி நடிக்கிறார்.

Recommended Video

கேம் ஓவர் த்ரில்லரில் வீல் சேரில் ஊனமாக நடிக்கும் தாப்ஸீ- வீடியோ

சென்னை: நடிகை டாப்ஸி பன்னு ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கிறார்.

வை ராஜா வை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் படம் கேம் ஓவர். த்ரில்லர் படமாக தயாராகும் இப்படத்தில் டாப்ஸி நடிக்கிறார்.

Actress Taapsee Pannu next is quirky thriller!

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. காலில் கட்டு போடப்பட்டு சக்கர நாற்காலியில் டாப்ஸி அமர்ந்திருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

வெகு சில கதாபாத்திரங்கள் மட்டுமே வரக்கூடிய நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக இருக்கும் எனவும், ஒரு வீட்டிற்குள் நடக்கும் கதைதான் படம் என்றும் இயக்குனர் அஸ்வின் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் பெண்களை மையப்படுத்திய கதை இல்லை எனவும் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

[நயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு! ஐராவிலும் கலக்குகிறார்!]

டாப்ஸி நடித்த பிங்க் திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்தே அவருடன் பணியாற்ற வேண்டுமென்று விரும்பியதாகவும், அது இப்போது சாத்தியமாகியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். எழுபது சதவிகித காட்சிகளில் டாப்ஸி வீல் சேரிலேயேதான் இருப்பாராம்.

நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தை இயக்கிய பிறகு, எஸ்.ஜே.சூர்யாவின் இரவாக்காலம் படத்தை இயக்கியுள்ளார். அப்படம் ரிலீசுக்கு தயாராகிவருகிறது. தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகும் கேம் ஓவர் திரைப்படத்திற்கு ரான் யோகன் இசையமைக்கிறார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் இப்படத்தை தயாரிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X