என்னை நம்பி தைரியத்தோடு வாங்க.. அன்பே டயானா நடிகையின் வாழ்க்கையை மாற்றிய தனுஷ்
சென்னை: தனுஷின் சகோதரி மகன் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். அந்தப் படத்தில் சிறிய ரோலில் நடித்தவர் ரம்யா ரங்கநாதன். அப்படம் தோல்வியடைந்தாலும் ரம்யாவுக்கு பெயர் கிடைத்தது. குறிப்பாக படத்தின் ஒரு இடத்தில் அவர் ஆடிய நடனம் பட்டாசாக இருந்தது. அப்படத்துக்கு பிறகு பாரி இளவழகன் இயக்கத்தில் அன்பே டயானா திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்து பேசியிருக்கிறார்.
நடிகர் தனுஷ் இயக்குநராக மாறிய திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். அதில் அவரது சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் அனிகா சுரேந்திரன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். ரம்யாவுக்கு அதுதான் முதல் படமாகும். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த அந்தப் படம் தோல்வியைத்தான் சந்தித்தது. இருப்பினும் ரம்யா அனைவரிடத்திலும் கவனத்தை ஈர்த்தார். நடிப்பு, நடனம் என அத்தனை ஏரியாக்களிலும் கேஷுவலாக அசத்தியிருந்தார் அவர்.

அன்பே டயானா: அந்தப் படத்துக்கு பிறகு பாரி இளவழகன் இயக்கத்தில் அன்பே டயானா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். சமீபத்தில்தான் அந்தப் படம் ரிலீஸானது. ஏற்கனவே பாரி இயக்கிய ஜமா திரைப்படம் நல்ல கவனத்தை பெற்றிருந்ததால்; இப்படத்தின் மீதும் அதீத எதிர்பார்ப்பு இருந்தது. நினைத்தபடியே படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. கதை திருட்டு சர்ச்சையெல்லாம் சந்தித்து பிறகு அது பொய் எனவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ரம்யாவுக்கு சக்சஸ்: இப்படத்தில் நடித்ததற்காக ரம்யா கண்டிப்பாக சந்தோஷப்பட்டிருப்பார். ஏனெனில் ஹீரோயினாக நடித்த முதல் திரைப்படமே அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது. வெறும் அழகை மட்டும் ஓட்டாமல்; நடிப்பு திறமையையும் இதில் அசாத்தியமாக காண்பித்திருந்தார். ஆங்கிலோ இந்திய பெண்ணாக அவர் நடித்திருந்தது அப்படியே ரியல் வாழ்க்கையில் பார்க்கும் பெண் போன்றே இருந்ததால்; அந்த கேரக்டரோடு ரசிகர்களும் கனெக்ட் ஆனார்கள். நிச்சயம் விரைவில் கோலிவுட்டில் ரம்யா டாப் 10 நடிகைகளில் ஒருவராக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரம்யாவின் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் ரம்யா. அப்போது பேசிய அவர், "நான் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தேன். எனது நடனத்தை பார்த்து தனுஷுக்கு பிடித்துவிட்டதால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் என் அருகே தனுஷ் இருந்தார். அவர் வழிகாட்டினார். அந்தப் படம் முடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை.
மாற்றிய தனுஷ்: நான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டபோது பெரிதாக தெரிந்தது. ஏனெனில் மாதா மாதம் நிலையான வருமானம் வந்துகொண்டிருந்தது. தனுஷ் சார்தான் என்னிடம், 'என்னை நம்புங்கள். உங்களுக்கு பெரிய எதிர்காலம் சினிமாவில் இருக்கிறது. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைக்காதீர்கள். கண்டிப்பாக என்னை நம்பி வாருங்கள்' என கூறினார். அதை நம்பி வேலையை விட்டுவிட்டேன். அந்த முடிவை எடுத்தால்தான் அடுத்தக்கட்டத்துக்கு போக முடியும் என எனக்கும் தோன்றியது" என்றார்.


Click it and Unblock the Notifications

