சிம்புவுடன் ஜோடி சேரும் கேத்ரீன் தெரசா! டபுள் ஹீரோயின் பக்கா மாஸ்!
கேத்ரீன் தெரசா சிம்புவுடன் நடிக்கிறார்
சென்னை: சிம்புவுடன் ஜோடி சேர்கிறார் கேத்ரீன் தெரசா.
சிம்பு நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் "அத்தாரின்டிகி தாரேதி" என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் சமீபத்தில் தொடங்கியது. செம ஸ்டைலிஷாக சிம்பு காட்சியளிக்கும் புகைப்படங்கள் வெளியாகின. ஒரு பாடல் காட்சியை அங்கு படமாக்கிய அவர்கள் இன்று சென்னை திரும்புகின்றனர். படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
[எனக்கு டச் இல்லையா, யார் சொன்னது?: சிசிவி மூலம் மணிரத்னம் பொளேர்#CCV]
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார் என செய்திகள் வெளியானது. தற்போது கேத்தரீன் தெரசாவும் ஜோடியாக நடிப்பது தெரிய வந்துள்ளது. முதல்முறையாக சிம்புவுடன் ஜோடி சேர்கிறார் கேத்ரீன் தெரசா. "அத்தாரின்டிகி தாரேதி" படத்தில் சமந்தா மற்றும் பிரணிதா நடித்திருந்தனர். அதில் யாருடைய கதாபாத்திரத்தில் கேத்ரீன் தெரசா நடிக்கிறார் எனத் தெரியவில்லை.
சுந்தர் சியின் கலகலப்பு 2 திரைப்படத்தில் ஏற்கனவே கேத்ரீன் தெரசா நடித்திருந்தார். தற்போது நீயா 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
சுந்தர் சியும் சிம்புவும் அடுத்தடுத்து படங்களில் பிசியாக உள்ளதால் இப்படத்தை சீக்கிரமாக முடித்துவிட திட்டமிட்டுள்ளனராம். சிம்பு அடுத்ததாக மாநாடு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சுந்தர் சி விஷாலை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











