எனக்கு டச் இல்லையா, யார் சொன்னது?: சிசிவி மூலம் மணிரத்னம் பொளேர்#CCV

By Siva

சென்னை: தன்னை விமர்சித்தவர்களுக்கு எல்லாம் செக்கச் சிவந்த வானம் படம் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார் மணிரத்னம்.

இயக்குனர் மணிரத்னத்திற்கு டச் விட்டுப் போய்விட்டது. அவர் ஓய்வு பெற நேரம் வந்துவிட்டது. இது புரியாமல் சும்மா மொக்கை படங்களாக எடுத்து அடிவாங்கிக் கொண்டிருக்கிறார் என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது.

[ செக்கச் சிவந்த வானம்: தெறிக்கவிடும் சிம்பு ரசிகர்கள் ]

விமர்சனங்கள் குறித்து அமைதியாக இருந்த மணிரத்னம் செக்கச் சிவந்த வானம் படம் மூலம் தக்க பதில் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

செக்கச் சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இத்தனை பேருக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க முடியும். பழைய மணியாக இருந்தால் பரவாயில்லை தற்போதுள்ள மணியால் இது எல்லாம் முடியாது என்று விமர்சித்தவர்கள் இன்று படத்தை பார்த்துவிட்டு வாயடைத்து போயுள்ளனர்.

அருமை

என்னத்த செக்கச் சிவந்த வானம், என்னத்த மணிரத்னம் என்ற புலம்பலுடன் படம் பார்க்க சென்றவர்களால் ஒரு நொடி கூட கண்ணை வேறு எங்கும் திருப்ப முடியவில்லை. அந்த அளவுக்கு கதையுடன் ஒன்றிவிட்டார்கள். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்துள்ளார் மணிரத்னம். இது மணியால் மட்டுமே முடியும் என்று பிளேட்டை மாற்றிப் போட்டுவிட்டனர்.

கலாய்

கலாய்

ஏ.ஆர். ரஹ்மான் பழைய மாதிரி இல்லை. அவரின் இசை பிடிபடவில்லை என்று சர்கார் பாடலை கேட்டு கலாய்த்தவர்கள் கூட இன்று அவரை பாராட்டியுள்ளனர். செக்கச் சிவந்த வானம் படம் மூலம் மணிரத்னம் மட்டும் அல்ல ரஹ்மானும் தான் அப்படியே தான் இருக்கிறேன் என்பதை நிரூபித்துள்ளார். மணி இஸ் பேக் என்ற தியேட்டரில் இருந்து வெளியே வருபவர்கள் கூறுகிறார்கள்.

போட்டி

போட்டி

படத்தில் அத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் விஜய் சேதுபதி தனித்து தெறிகிறார். நடிப்பில் அசத்தி ரசிகர்களை தன்னை கவனிக்க வைத்துள்ளார். எனக்கு யாரும் போட்டி அல்ல, நான் தான் எனக்கு போட்டி என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் அவர். அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், அதிதி என்று அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X