பர்ப்பிள் குயினாக மாறிய டிடி.. காபி கப்புடன் கொடுத்த க்யூட் போஸ்.. கேப்ஷனை கவனிங்க பாஸ்
சென்னை: தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் தொகுப்பாளர்களில் ஒருவரான டிடி நீலகண்டன் (திவ்யதர்ஷினி), சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தன்னம்பிக்கைக்கு பெயர் போன இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அன்பும் மரியாதையும் எப்போது அபரிமிதம் தான். தனது நிகழ்ச்சிகள், பயணங்கள், போட்டோஷூட் புகைப்படங்கள் என தொடர்ந்து ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் டிடி, தற்போது பர்ப்பிள் நிற உடையில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஹோட்டல் அறையில் காபி கப்பை கையில் பிடித்தபடியும், ஜன்னல் அருகே வெளிச்சத்தில் சிரித்தபடியும், விதவிதமான போஸ்களில் டிடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. பர்ப்பிள் நிற அனார்கலி உடையுடன், நம்ம ஊர் ஜிமிக்கி கம்மல்களை அணிந்து, எளிமையான மேக்கப்பில் அவர் கொடுத்திருக்கும் லுக் தற்போது பலரையும் கவர்ந்துள்ளது.

கேப்ஷன்: இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த டிடி, "Who's your purple? Purple is someone with whom you click, from the moment you met them, someone warm and a joy to be around" என்ற ஆங்கில கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். அதாவது, "உங்களை முதல் சந்திப்பிலேயே நெருக்கமாக உணர வைத்த, எப்போதும் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கச் செய்த நபர்தான் உங்கள் 'பர்ப்பிள்'" என்ற அர்த்தத்தில் அந்த பதிவை பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் ஆர்வம்: டிடியின் இந்த கேப்ஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. "உங்களுடைய Purple யார்?" என்று ரசிகர்களும் கமெண்ட் பகுதியில் தங்களது வாழ்க்கையில் முதல் சந்திப்பிலேயே நெருக்கமான உணர்வைக் கொடுத்த நண்பர்களை டேக் செய்து பதிலளித்து வருகின்றனர். அதேநேரம், "பர்ப்பிள் குயின்", "எப்போதும் போல அழகு", "இந்த லுக் செம்ம கிளாஸ்" என டிடியின் புதிய போட்டோக்களை பலர் பாராட்டி வருகின்றனர்.

தைரியம்: சின்னத்திரையில் பல ஆண்டுகளாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள டிடி, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் தனது தனித்துவமான பதிவுகள் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இந்த புதிய போட்டோஷூட்டும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டிடி ஒரு தொலைக்காட்சி பிரபலமாக மட்டும் இல்லாமல், பெண் ரசிகைகள் மத்தியில் தன்னம்பிக்கைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார். இவரது சில பேட்டிகள் மற்றும் சில பாட்-காஸ்ட்கள் ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கிறது என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
