தம்பியா.. தங்கச்சியா? பேபி பம்பைக் காட்டிய தீபிகா படுகோனே.. குவியும் வாழ்த்து!
சென்னை: பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் தம்பதியினர், தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்பதற்குத் தயாராகி வருகின்றனர். தற்போது அவர்கள் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் சர்ப்ரைஸ் ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது!
நடிகை தீபிகா படுகோனே: பாலிவுட்டின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படமான 'Goliyon Ki Raasleela Ram-Leela' செட்டில் தொடங்கிய தீபிகா - ரன்வீர் சிங்கின் காதல் கதை, திரைக்கு வெளியேயும் சூறாவளியாக வீசியது. அதனை தொடர்ந்து பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், 83 என வரிசையாக ஹிட் படங்களில் ஜோடியாக நடித்து வெற்றியை அள்ளிக் கொடுத்த இந்தக் காதல் ஜோடி, கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியில் கொங்கணி மற்றும் சிந்தி மரபு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
2-வது குழந்தை: திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 2024-ம் ஆண்டு தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு 'துவா' எனப் பெயரிட்டு கொஞ்சி மகிழ்ந்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தீபிகா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கர்ப்பகால வயிற்றுடன் இருக்கும் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

பேபி பம்பம் போட்டோ: அந்தப் புகைப்படத்தில், கணவர் ரன்வீர் சிங் தோளோடு சாய, மூத்த மகள் துவா பாப்பா தீபிகாவின் பேபி பம்பைக் கட்டிப்பிடித்துச் செல்லமாக முத்தமிடுவது போன்ற போஸ் கொடுத்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல், அம்மா, அப்பா... உன்னை மிகவும் நேசிக்கிறோம். விரைவில் நாங்கள் 4 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமாக மாறப் போகிறோம் என நெகிழ்ச்சியான கேப்ஷனை போட்டுள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் வெளியான சில நிமிடங்களிலேயே சோஷியல் மீடியாவில் லைக்ஸ்களையும் வாழ்த்துக்களையும் அள்ளிக்குவித்து வருகிறது.
சினிமாவிலும் பிஸி: ஒருபக்கம் தாய்மை கொண்டாட்டத்திற்குத் தயாராகி வரும் தீபிகா, ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட 'King' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். மறுபக்கம் ரன்வீர் சிங், 'துரந்தர்', 'துரந்தர் 2' படங்களின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, 'Pralaya' என்ற படத்தில் கமிட்டாகி படு பிஸியாக நடித்து வருகிறார்!


Click it and Unblock the Notifications
