நம்ம சுந்தரி பொண்ணா இது? மாடர்ன் உடையில் கவர்ச்சி அவதாரம் எடுத்த கேப்ரில்லா செல்லஸ்!

சென்னை: சன் டிவியின் சுந்தரி சீரியல் மூலம் குடும்பப் பெண்ணாகத் தமிழ் இல்லத்தரசிகளின் மனதை வென்ற நடிகை கேப்ரில்லா செல்லஸ், தற்போது அதற்கு முற்றிலும் மாறாக டெனிம் மினி ஸ்கர்ட் மற்றும் கிராப் டாப்ஸில் செம்ம ஹாட் போட்டோஷூட் நடத்திச் சோஷியல் மீடியாவை அலறவிட்டுள்ளார்.

நடிகை கேப்ரில்லா செல்லஸ்: விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் தனிப் போட்டியாளராகக் களமிறங்கி, தனது அதிரடி ஸ்டாண்ட் அப் காமெடியால் அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கேப்ரில்லா செல்லஸ். தொகுப்பாளினி டிடி மாதிரியெல்லாம் மிமிக்ரி செய்து அரங்கத்தையே அதிர வைத்த இவர், டிக்டாக்கில் கவிதைகள் மற்றும் காதல் ரீல்ஸ்கள் மூலமாக ஃபேமஸ் ஆனார். இதன் தொடர்ச்சியாகச் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குச் சென்ற கேப்ரில்லா, நயன்தாராவின் ஐரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி மற்றும் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 உள்ளிட்ட பெரிய படங்களில் சிறிய ரோலி நடித்தார்.

Sun TV Sundari Gabriella Sellus
Photo Credit:

சுந்தரி சீரியல்: சன் தொலைக்காட்சியின் பிளாக்பஸ்டர் ஹிட் சீரியலான 'சுந்தரி' தொடரில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. நிறத்தைக் காரணம் காட்டி கணவனால் கைவிடப்பட்டாலும், தடைகளை உடைத்து ஐஏஎஸ் அதிகாரியாகும் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து, பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாக மாறினார்.

Also Read
எனக்கு 99 புருஷன்..100வதா நீ வரியா.. ஆபாசக் கமெண்ட் போட்டவனுக்கு ரேகா நாயர் கொடுத்த பதிலடி!
எனக்கு 99 புருஷன்..100வதா நீ வரியா.. ஆபாசக் கமெண்ட் போட்டவனுக்கு ரேகா நாயர் கொடுத்த பதிலடி!

கிளாமர் அவதாரம்: சுந்தரி சீரியல் முடிந்த பிறகு, சினிமா மற்றும் சீரியலில் வாய்ப்பு வராததால், சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் கேப்ரில்லா செல்லஸ், விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமைத் தன் வசப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், கருப்பு நிறக் டைட் கிராப் டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் மினி ஸ்கர்ட் அணிந்து கூலிங் கிளாஸுடன் கவர்ச்சியாகப் போஸ் கொடுத்துள்ளார். புடவையில் பார்த்துப் பழகிய 'சுந்தரி' கேப்ரில்லாவை, இப்படிப் மாடர்ன் லுக்கில் பார்த்த ரசிகர்கள் அடடே... நம்ம சுந்தரி பொண்ணா இது? எனச் வாயடைத்துப் போய் லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X