இஞ்சி இடுப்பழகி: கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திஷா
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை திஷா பதானி தான் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்ததன் பலனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை திஷா பதானி தன்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்பது இல்லை. தனக்கு பொருத்தமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அவர் தற்போது சல்மான் கானின் பாரத் படத்தில் நடித்து வருகிறார்.
[தனுஷின் கடின உழைப்பில் மண்ணை அள்ளிப் போட்ட தமிழ் ராக்கர்ஸ்]

தங்கை
பாரத் படத்தில் திஷா சல்மானின் கானின் தங்கையாக நடித்து வருகிறார். பாகி 2 ஹிட் படம் கொடுத்த கையோடு சல்மானுக்கு தங்கையாக நடிக்க அவர் தயங்கவில்லை. சல்மானிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் திஷா. சல்மான் தான் பெரிய நடிகர் என்ற பந்தாவே இல்லாத ஆள் என்கிறார் அவர்.
திஷா
திஷா தினமும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்துள்ளார். இடுப்பு பகுதியை அழகாக்கியதில் இருந்து அதை அவ்வப்போது புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போதும் தனது இடுப்பை காட்டி ஒரு கவர்ச்சி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

நடிப்பு
திஷா படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அவர் கால்வின் க்ளெய்ன் உள்ளாடை அணிந்து நிற்கிறார். இந்நிலையில் தனக்கு மிகவும் பிடித்த பிராண்டுடன் விரைவில் கூட்டணி அமையப் போவதாகவும், அதனால் மிக்க மகிழ்ச்சியில் உள்ளதாகவும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளர்.

டைகர்
பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃபை காதலித்து வந்தார் திஷா. தற்போது அவர்கள் பிரிந்துவிட்டனர். இருவரின் வாழ்வின் புது ஆட்கள் வந்துவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











