ஆடையணியாமல் அந்தரங்க காட்சி.. பாதியில் ரிப்பேர் ஆன கேமரா.. பிரபல நடிகை சொல்றதை கேளுங்க!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களுக்கே அதிகளவில் சிஜி காட்சிகளை உபயோகப்படுத்தாமல் கேமரா ட்ரிக்ஸ் வைத்தே இப்போதும் படங்களை கொடுக்க முடியும் என சாதித்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.
தி ஒடிஸி படம் 2 நாட்களிலேயே படத்தின் 2500 கோடி பட்ஜெட்டை விட அதிக வசூலை ஈட்டியுள்ளது. 3வது நாள் வசூல் எல்லாம் படக்குழுவுக்கும் கிறிஸ்டோபர் நோலனுக்கும் மிகப்பெரிய லாபம் தான் என்கின்றனர்.

இந்நிலையில், தி ஒடிஸி படத்துக்கு முன்பாக அறிவியல் தந்தை ஓபன்ஹைமரின் பயோபிக் படத்தை நோலன் இயக்கும் போது நிர்வாணக் காட்சி படமாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென கேமரா ரிப்பேர் ஆகிவிட்டது என்றும் அப்போது கிறிஸ்டோபர் நோலன் மற்றும் படக்குழுவினர் அந்த சூழ்நிலையில் என்ன செய்தார்கள் என்பது குறித்து அந்த காட்சியில் ஆடை அணியாமல் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை புளோரன்ஸ் பக் கூறிய காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
நிர்வாணக் காட்சியின் போது ரிப்பேரான கேமரா: 'ஓபன்ஹைமர்' (Oppenheimer) திரைப்படத்தில் தமக்கும் சிலியன் மர்பிக்கும் (Cillian Murphy) இடையேயான அந்தரங்க காட்சியின் போது கேமரா ரிப்பேர் ஆனதாகவும், இதனால் இருவரும் அதை சரிசெய்யும் வரை படப்பிடிப்புத் தளத்தில் அதே கோலத்தில் காத்திருக்க நேரிட்டதாகவும் நடிகை புளோரன்ஸ் பக் (Florence Pugh) பேசியது பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது.
போட்டு உடைத்த புளோரன்ஸ் பக்: "எங்களது நெருக்கமான காட்சியின் நடுவில் கேமரா பழுதடைந்தது. யாருக்கும் இது தெரியாது, ஆனால் அதுதான் நடந்தது" என்று புளோரன்ஸ் பக் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் இருவரும் ஆடைகள் இல்லாமல் இருந்தபோது கேமரா பழுதடைந்தது, அது ஒரு சரியான தருணம் அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.
தடைசெய்யப்பட்ட படப்பிடிப்புத் தளம் (closed set) என்பதால் அந்தச் சூழல் மிகவும் தர்மசங்கடமாக இருந்ததாகவும், தொழில்நுட்பக் குழுவினர் சாதனங்களை பழுதுபார்க்கும் வரை தானும் மர்பியும் காத்திருக்க வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார்.
அந்த எதிர்பாராத இடைவேளையில் அமைதியாக இருக்க விரும்பாத புளோரன்ஸ் பக், அதனை ஒரு கற்றல் தருணமாக மாற்றியுள்ளார். "சரி, இந்த கேமராவில் என்ன பிரச்சனை என்று எனக்குச் சொல்லுங்கள்?" என அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளார்.
பின்னர், கேமராவிற்குள் ஒளி சென்ற விதம் தொடர்பாகவே அந்தப் பிரச்சனை ஏற்பட்டது என்று இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் அவரிடம் விளக்கியுள்ளார்.
இந்த அனுபவம் 'ஓபன்ஹைமர்' குழுவினரின் அர்ப்பணிப்பையும் திறமையையும் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்ட புளோரன்ஸ் பக், படப்பிடிப்புத் தளத்தில் கழித்த ஒவ்வொரு தருணமும் தமக்குக் கிடைத்த பெருமை என்று பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஐமேக்ஸ் கேமராவில் படம் பிடித்து வரும் கிறிஸ்டோபர் நோலன் தனது படப்பிடிப்பு தளங்களில் சில கேமராக்கள் உடைந்து போனது குறித்து முன்னதாக பேட்டி ஒன்றிலும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

