வாரம் முழுக்க நடிப்பில் பிஸியோ பிஸி.. வார இறுதியில் ராஷ்மிகா என்ன செய்வார் தெரியுமா?

மும்பை: நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. அவரது நடிப்பில் கடைசியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம் வெளியானது. படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹிந்தியில் இன்னொரு ஹிட்டை பார்சல் செய்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தச் சூழலில் அவர் வார இறுதியில் செய்யும் விஷயம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரது அழகையும், நடிப்பையும் பார்த்த தெலுங்கு திரையுலகம் ராஷ்மிகாவுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். அதனையடுத்து டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவுக்கென்ற ரசிகர்கள் குறையவில்லை. தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

Here are the Details about Rashmika Mandanna Week End Plan

தமிழில் ராஷ்மிகா: தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். விஜய்யுடன் நடித்திருப்பதால் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வரலாம் என கணக்கு போட்டார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

நேஷனல் க்ரஷ்: தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள். கடைசியாக அவர் அனிமல் படத்தில் நடித்தார். படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. ராஷ்மிகாவும் ஓவர் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்த வாய்ப்புகள்: ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு அனிமல் படத்தில் பாராட்டையும் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் ஹிட்டால் அவர் சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்தார் ராஷ்மிகா. அனிமல் படத்தின் ஹிட்டால் ஹிந்தியில் அவருக்கு மேலும் சில பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு ராஷ்மிகா மந்தனா சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஃப்ளாப் ஆகும்னு தெரிஞ்சே விஜய் நடித்த படம் இதுதான்.. எல்லாம் அந்த ஒருவருக்காக


குபேரா: மேலும் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா. தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் திணறும் ராஷ்மிகா; குபேரா படத்தின் மூலம் அந்த இடத்தை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இதுதவிர வேறு படங்களில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார் அவர்.

வீக் எண்ட்: இப்படி படங்களிலும், விளம்பரங்களிலும் நடிப்பதில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா வார இறுதியில் அதாவது வீக் எண்ட்டில் என்ன செய்வார், யாரோடு இருப்பார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அவர் தனது குடும்பத்தையும், தனக்கென இருக்கும் தோழிகள் வட்டத்தையும் ரொம்பவே நேசிப்பாராம். வாரம் முழுவதும் பிஸியாக நடித்தாலும் வார இறுதியில் குடும்பத்தினருடன், தோழிகளுடன் நேரத்தை செலவழிப்பாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X