தாய் கிழவி பாடலுக்கு டான்ஸ்.. ராதிகாவுடன் மேடையில் சூப்பர் நடனம் ஆடிய கீர்த்தி சுரேஷ்
சென்னை: கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சில வருடங்களுக்கு முன்பு தனது காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார். மணமுடித்த பிறகும் பிஸியாக நடித்துவருகிறார் அவர். கடைசியாக அவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படம் வந்தது. அடுத்ததாக தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளை சேர்த்து மொத்தம் 6 படங்கள் வரவிருக்கின்றன.
நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை சேர்ந்தவர். 80களில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்த மேனகாவின் மகள் ஆவார். தமிழில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து அவற்றில் வெற்றியையும், தோல்வியையும் பார்த்தவர். இங்கு மட்டும் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என டாப் ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்துவருகிறார். அதுமட்டுமின்றி ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளிலும் விடாமல் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் பிஸியான நடிகையாக மாறியிருக்கிறார்.

திருமணத்துக்கு பின்பும்: இதற்கிடையே அவர் ஆண்டனி தட்டில் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்திருந்திருக்கிறார். யாருக்கும் தெரியாமல் செய்த காதலை; சில வருடங்களுக்கு முன்பு பொதுவெளிக்கு அறிவித்து கோவாவில் வைத்து திருமணமும் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் பல நடிகைகள் ஃபீல்டிலிருந்து ஒதுங்குவார்கள். இவரோ திருமணத்துக்கு பின்பு இன்னும் பிஸியாக நடிக்க தொடங்கியிருக்கிறார்.
அடுத்த படங்கள்: கடைசியாக தமிழில் அவர் ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தில் நடித்தார். அதில் அவருடன் ராதிகா உள்ளிட்டோரும் நடித்திருந்தார். படம் தோல்வியையே சந்தித்தது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தீவிரமாக இருக்கிறார் அவர். அந்தவகையில் அடுத்ததாக தமிழில் சத்தியவான் சாவித்திரி, கன்னிவெடி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. மேலும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தியிலும் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடனம் ஆடிய கீர்த்தி சுரேஷ்: இந்நிலையில் அவர் சமீபத்தில் நடந்த தனியார் ஊடகத்தின் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. அவருக்கு விருது வழங்கியவர் ராதிகா. அப்போது இரண்டு பேரும் சேர்ந்து தாய் கிழவி பாடலுக்கு நடனம் ஆடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. உடனே உற்சாகமடைந்த இரண்டு பேரும், 'தாய் கிழவி வரா ஒதுங்கிக்க' பாடலுக்கு சூப்பராகவும், க்யூட்டாகவும் நடனம் ஆடினார்கள்.
ராதிகா சொன்னது: முன்னதாக, கீர்த்தி சுரேஷ் குறித்து பேசியிருந்த நடிகை ராதிகா, "கீர்த்தி சுரேஷை நாங்கள்தான் தமிழில் அறிமுகம் செய்தோம். மகாநடி படத்தில் அவரது நடிப்பை பார்த்து நான் பிரமித்துவிட்டேன். சாவித்திரி மாதிரி அப்படியே நடித்திருந்தார்" என புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷும், ராதிகாவும் ஏற்கனவே நெருக்கமாக இருந்த சூழலில்; ரிவால்வர் ரீட்டா திரைப்படம் அவர்களுக்கு இடையேயான நட்பை மேலும் பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
