அம்மா நீங்க காமெடி பீஸ்.. சிரிப்புதான் வருது..குஷ்புவை கலாய்த்த மகள்கள்.. செம ஃபன்
சென்னை: தமிழ் சினிமாவி 80களில் ஹீரோயினாக அறிமுகமாகி தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் குஷ்பு. முறைமாமன் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் சுந்தர்.சியை காதலித்தார். பல வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்தவருக்கு நேற்று கோவாவில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
கோலிவுட்டின் எவர் க்ரீன் ஹீரோயின் என்று பெயர் எடுத்தவர் குஷ்பு. பல மொழிகளில் ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்த அவர்; முறைமாமன் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் சுந்தர்.சியை காதலித்தார். இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். மூத்தவர் பெயர் அவந்திகா. இளையவர் பெயர் அனந்திதா.

மூத்த மகள் சினிமாவில்: இரண்டு பேருமே சினிமாவில்தான் இயங்கிவருகிறார்கள். மூத்தவரான அவந்திகா மலையாள திரைப்படமான ஆரம்பம் படத்தில் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புதான் அந்தப் படத்துக்கான பூஜை கேரளாவில் நடந்தது. தமிழில் அவர் அட்டாக்கர் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மலையாளம் மற்றும் தமிழில் அம்மா குஷ்பு மாதிரியே பெரிய பெயரை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இரண்டாவது மகளும்: மூத்தவர் போலவே இரண்டாவது மகள் அனந்திதாவும் இப்போது சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். ஏற்கனவே அவர் மணிரத்னத்திடம் பொன்னியின் செல்வன், தக் லைஃப் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அடுத்ததாக டபுள் ஆக்குபன்ஸி திரைப்படத்தில் க்ரியேட்டிவ் புரொடியூசராக வேலை பார்த்தார்.
மூத்தவருக்கு திருமணம்: இதற்கிடையே குஷ்பு மகள் அவந்திகாவுக்கும், ஷ்ரவன் சீனிவாசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடி ஆகியோருக்கு குஷ்பு பத்திரிகையும் வைத்தார். திட்டமிட்டபடி கோவாவில் வைத்து நேற்று அந்தத் தம்பதி திருமணம் செய்துகொண்டார்கள். விரைவில் சென்னையில் பிரபலங்களுக்கென வரவேற்பும் நடக்கவிருக்கிறது.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் குஷ்பு கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "எங்கள் வீட்டில் என்னைவிட எல்லோரும் உயரம்தான். அவர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்டூலை போட்டு நிற்பேன். அதற்காகவே பெரிய ஹீலை வாங்கி வைத்திருக்கிறேன். எதாவது சண்டை போட்டால்; எனது மகள்களோ, 'அம்மா நீங்க திட்டும்போது காமெடி பீஸா தெரிகிறீர்கள். நீங்கள் உயரம் குறைவு. நாங்கள் உங்களை டாப் ஆங்கிளில் பார்க்கும்போது சிரிப்பாக வருது என சொல்வார்கள்' என்றார்.


Click it and Unblock the Notifications
