நான் திருநங்கையா?.. உங்களுக்கு என்னதான்டா வேண்டும்..குஷ்பு மகள் அதிரடி
சென்னை: நடிகை குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஹீரோயினாகவும், ஒருவர் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். அனந்திதா கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றிய டபுள் ஆக்குபன்ஸி திரைப்படம் அண்மையில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மிடீயாவில் வைரலாகியிருக்கிறது.
முறைமாமன் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் சுந்தர்.சியை காதலித்த குஷ்பு அவரையே திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு இரண்டு பேருக்கும் இரண்டு மகள்கள் பிறந்தார்கள். ஆரம்பத்தில் சினிமாவில் பெரிய ஆர்வம் இல்லாமதல்தான் அவர்கள் இருந்தார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல அவர்களுக்கும் திரைத்துறையில் காலடி பதிக்கும் எண்ணம் வந்துவிட; அதற்கு குஷ்புவும், சுந்தரும் தங்களது முழு சப்போர்ட்டை கொடுத்தார்கள்.

ஹீரோயின் அவந்திகா: இதனையடுத்து அவந்திகா மலையாள சினிமாவில் ஆரம்பம் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். தாய் மாதிரியே அவரும் பெரிய பெயரை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவருக்கு விரைவில் திருமணமும் நடக்கவிருக்கிறது. அதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் விஜய் ஆகியோரை சமீபத்தில் குடும்பத்தோடு நேரில் சந்தித்து பத்திரிகை வழங்கினார் குஷ்பு.
இரண்டாவது மகள்: குஷ்புவின் இன்னொரு மகளான அனந்திதா இயக்குநர் மணிரத்னத்திடம் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். இப்போது அவர் டபுள் ஆக்குபன்ஸி திரைப்படத்தில் க்ரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்புதான் அந்தப் படம் வெளியானது. ஓரளவுக்கு பாசிட்டிவ் விமர்சனத்தையே அந்தப் படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
உருவகேலியை சந்தித்த மகள்கள்: இதற்கிடையே அனந்திதாவும், அவந்திகாவும் ரொம்பவே உருவ கேலியை சந்தித்தவர்கள். அவர்கள் இரண்டு பேருமே சிறு வயதில் கொஞ்சம் குண்டாக இருப்பார்கள். அதை வைத்து பலரும் இஷ்டத்துக்கு பேசினார்கள். இந்நிலையில் சமீபத்தில் அனந்திதா அளித்த பேட்டி பலரிடம் பேசுபொருளாகியிருக்கிறது. அவர் அந்தப் பேட்டியில், "எனக்கு 15 வயது இருக்கும்போது ரொம்பவே குண்டாக இருந்தேன். அப்போது, 'நீ அசிங்கமாக இருக்கிறாய். உன் அம்மாவை பார். எவ்வளவு அழகாக இருக்கிறார்' என சொன்னார்கள். அப்போ நான் ஒரு குழந்தை.
இப்போ இப்படி: ஒரு குழந்தையை பார்த்து கேட்கும் கேள்வியா அது?.. சரி, இப்போ நான் ஒல்லியாக இருக்கிறேன். ஃபிட்டாக இருக்கிறேன். உடமை குறைத்த பிறகு,'ஏன் இப்போ எலும்புக்கூடு மாதிரி இருக்கிறாய். திருநங்கை மாதிரி இருக்கிறாய்' என சொல்கிறார்கள். உங்களுக்கு என்னதான் டா வேண்டும் நான் எப்படி இருக்கணும்னு சொல்வதற்கு நீங்கள் யார்?' என கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, 'உருவ கேலி செய்த அனைவருக்கும் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்' என வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
