ரெஜிஸ்டர் ஆஃபிஸில் திருமணம் போதும்.. மகள் அவந்திகா போட்ட பிளான்.. குஷ்பு வாங்கிய கடன்

சென்னை: குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவுக்கு சில நாட்களுக்கு முன்பு கோவாவில் வைத்து திருமணம் ஜோராக நடைபெற்றது. அதில் திரிஷா, சிரஞ்சீவி, பாக்யராஜ், நாகார்ஜுனா, வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். சென்னையில் விரைவில் ரிசப்ஷன் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அவந்திகா தன்னுடைய திருமணத்துக்கு போட்டிருந்த பிளான் குறித்து தெரியவந்திருக்கிறது.

முறைமாமன் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் சுந்தர்.சியை காதலித்தார் குஷ்பு. கிட்டத்தட்ட 10 வருடங்களாக காதலித்த அவர்கள் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தாய், தந்தை மாதிரி சினிமாவில்தான் அவர்களும் இயங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Khushbu s Daughter Avantika Initially Planned a Simple Register Marriage Says Chitra Lakshmanan
Photo Credit:

மூத்தவர் ஹீரோயின்: மூத்த மகளான அவந்திகா மலையாளத்தில் ஆரம்பம் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். தமிழில் அட்டாக்கர் என்ற படத்திலும் நடிக்கிறார். தாய் மாதிரியே இவரும் பெரிய கதாநாயகியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மகளான அனந்திதா முதலில் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்துவிட்டு; டபுள் ஆக்குபன்ஸி திரைப்படத்தில் க்ரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றினார்.

Also Read
பாக்யராஜ் துக்க வீடு சர்க்கஸ் போல் ஆகிவிட்டது.. இரக்கமே இல்லையா?.. விஜய்க்கு ராதிகா கோரிக்கை
பாக்யராஜ் துக்க வீடு சர்க்கஸ் போல் ஆகிவிட்டது.. இரக்கமே இல்லையா?.. விஜய்க்கு ராதிகா கோரிக்கை

மூத்தவருக்கு திருமணம்: சூழல் இப்படி இருக்க ஷ்ரவன் என்பவருக்கும், அவந்திகாவுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி கோவாவில் சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது. அதில் திரிஷா, நாகார்ஜூனா, பாக்யராஜ், சிரஞ்சீவி, வெங்கடேஷ், தமன்னா என பலர் கலந்துகொண்டார்கள். ரொம்பவே குறைவான செலிபிரிட்டிகள்தான் அந்தத் திருமணத்தில் பங்கேற்றிருந்தார்கள்.

இங்கே ரிசப்ஷன்: முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு எல்லாம் பத்திரிகைகள் வைக்கப்பட்டன. ஆனால் அவர்கள் கோவாவில் நடந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. சென்னையில் நடக்கவிருக்கும் வரவேற்பில் நிச்சயம் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்திருக்கும் தகவல்கள் ஆச்சரியத்தை கொடுத்திருக்கின்றன.

சித்ரா லட்சுமணன் சொன்னது: அவர் தன் யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "முதலில் நீங்களும், அப்பாவும் வாருங்கள் ரெஜிஸ்டர் ஆஃபிஸில் நாங்கள் திருமணம் செய்துகொள்கிறோம் என்றுதான் அவந்திகா சொன்னார். அதை கேட்டு ஷாக்கான குஷ்பு; அப்படியெல்லாம் நடத்திட முடியாது. ரிசப்ஷனாவது வைக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார். மொத்தமே குஷ்புவுக்கு 25, சுந்தர்.சிக்கு 25, அவந்திகாவுக்கு 25 என 75 பத்திரிகைகள்தான் அடித்தார்கள். சுந்தரிடமிருந்து 10 பத்திரிகைகள் கடன் வாங்கி தன்னுடைய வட்டத்துக்கு கொடுத்தார் குஷ்பு. தன்னுடைய திருமணத்துக்கு தன்னுடைய நண்பர்கள் மட்டும் வந்தால் போதும் என நினைத்தார் அவந்திகா" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X