Thalapathy 68 - விஜய்க்கே நோ சொன்னாரா இவானா?.. எல்லாம் அதுதான் காரணமாம்.. பரபர தகவல் உள்ளே
சென்னை: Thalapathy 68 (தளபதி 68) தளபதி 68 படத்தில் நடிப்பதற்கு லவ் டுடே நாயகி இவானா நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது. இதனால் விஜய் கொஞ்சம் அப்செட்தான். இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது படம். இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார்.

தளபதி 68: அந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது அந்த நிறுவனத்துக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் பூஜையானது லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
மல்டி ஸ்டாரர்: படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி அமரன், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. முதல் நாள் ஷூட்டிங்காக பிரசாத் ஸ்டூடியோவில் வைத்து ஒரு பாடல் காட்சியை படமாக்கினார் வெங்கட் பிரபு. அதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா நடனம் ஆடியதாக தெரிகிறது.
எதிர்நீச்சல் குணசேகரனாக நடிக்கும் வேல ராமமூர்த்தியின் சம்பளம்.. மாரிமுத்து மறைவால் மாறிய வாழ்க்கை!
வெளிநாட்டில் ஷூட்டிங்: அந்தப் பாடலை முடித்துவிட்டு நேராக தாய்லாந்து சென்றது படக்குழு. அங்கு சில ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனையடுத்து சென்னை திரும்பி குட்டி ரெஸ்ட் எடுத்துவிட்டு அடுத்ததாக துருக்கிக்கு சென்றிருக்கிறது. படமானது டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிவருவதாக திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
இவானா: இதற்கிடையே இந்தப் படத்தில் லவ் டுடே படத்தின் மூலம் சென்சேஷனல் ஆனால் இவானா விஜய்க்கு தங்கையாக நடிக்கிறார் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. தற்போது அதுகுறித்து புதிய தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி தளபதி 68ல் நடிப்பதற்கு இவானா நோ சொல்லிவிட்டாராம்.
Vijay - கைகோர்ப்போம் துயர் துடைப்போம்.. இயன்ற உதவிகளை செய்யுங்கள்.. மௌனம் கலைத்த விஜய்
என்ன காரணம்?: அதாவது லவ் டுடே படம் ஹீரோயினாக இவானாவுக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இந்த நேரத்தில் தங்கையாக நடித்தால் மீண்டும் அதே போன்றுதான் தன்னிடம் கதைகளை கொண்டு வருவார்கள். பிறகு ஹீரோயின் பட்டியலிலிருந்து ஒதுக்கிவிடுவார்கள் என அவர் நினைத்ததால்தான் நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











