வைரலான நயன்தாரா, விக்னேஷ் செல்ஃபி: கல்யாணம் எப்போ அன்பான இயக்குனரே?
Recommended Video

சென்னை: நயன்தாராவுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் எடுத்த செல்ஃபி வைரலாகியுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அடிக்கடி அமெரிக்காவுக்கு சென்று செல்ஃபி எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் ஒரு செல்ஃபி வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
View this post on InstagramA post shared by Vignesh Shivn (@wikkiofficial) on
வாழ்த்து
ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து தானும், நயன்தாராவும் சேர்ந்து எடுத்த செல்ஃபியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதை பார்த்த ரசிகர்களோ சூப்பர் சார், தலைவியை சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள். கைவிட்டுவிடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
விநாயகர்
இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வெளியிட்ட விக்னேஷ் சிவன் ட்விட்டரில் விநாயகர் சிலை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
[Read This: என்னம்மா பேண்ட் போட மறந்துட்டீங்களேம்மா: ஸ்ரீதேவி மகளை கலாய்த்த ரசிகர்கள்]
ஆவல்
தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து தனது அடுத்த பட அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் உள்ளார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் அடுத்த பட அறிவிப்பு குறித்தும், ஹீரோ யார் என்றும் தெரிந்து கொள்ள சூர்யா ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

நயன்தாரா
படங்களில் ஹீரோ அளவுக்கு தில்லாக நடிக்கிறார் நயன்தாரா. அண்மையில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் சிபிஐ அதிகாரி அஞ்சலியாக அதகளம் செய்திருந்தார். ஆனால் விக்னேஷ் சிவனுடன் இருக்கும்போது மட்டும் அவரிடம் அந்த வீரம் இல்லை நாணம் மட்டுமே உள்ளது. அந்த நயன்தாரா தானா இது என்று வியக்கும் வகையில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











