நயன்தாராவின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்.. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது தமிழில் மண்ணாங்கட்டி மலையாளத்தில் டியர் ஸ்டூடண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க தனது குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை அவர் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

நயன்தாரா பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்களை சந்தித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரை கிளாமருக்காக மட்டுமே திரையுலகம் பயன்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும் முட்டி மோதி தன்னுடைய திறமையை காண்பிக்கும் படங்களில் நடிக்க முயன்றுகொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார். பிரபுதேவாவை காதலித்தபோது சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பிறகு மீண்டும் சினிமாவுக்குள் வந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்தார்.

Nayanthara s photos celebrating Tamil New Year are trending on social media


நானும் ரௌடிதான்: அந்தவகையில் அவருக்கு கிடைத்த படம்தான் நானும் ரௌடிதான் மற்றும் அறம். இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. குறிப்பாக நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அறம் படம் வெளியானதிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழிக்கு சொந்தமானார் நயன். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சினிமாக்காரர்களுக்கு ஜக்கி வாசுதேவ் பணம் கொடுக்குறார் போல?.. நல்லவேளை ரஜினி போகல.. அந்தணன் ஷேரிங்ஸ்


குடும்ப வாழ்க்கை, நடிப்பு: திருமணம் செய்துகொண்ட நயன் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டாலே நடிப்புக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார் அவர்.

Nayanthara s photos celebrating Tamil New Year are trending on social media

தமிழில்: ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் தீவிர கவனம் செலுத்திவரும் அவர் தற்போது அன்னபூரணி படத்தில் நடித்திருக்கிறார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் நயனுக்கு 75ஆவது படமாகும். தமன் இசையமைக்க கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சமையல் கலைஞராக நயன் இதில் நடித்திருந்தார். படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது அவர் தமிழில் மண்ணாங்கட்டி, மலையாளத்தில் டியர் ஸ்டூடண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

அய்யய்யோ GOAT ஃபர்ஸ்ட் சிங்கிளை இப்படி கலாய்ச்சிட்டாரே.. ப்ளூ சட்டை என்ன சொல்லிருக்காரு பாருங்க


நிம்மதியான நயன்: அவர் பிஸியாக படங்களில் நடித்துவந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில் கவனமாக இருக்கிறார். அதிலும் தனது மகன்கள் மீது ரொம்பவே பிரியமாக இருக்கும் அவர் அவ்வப்போது அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார். இதற்கிடையே சமூக வலைதளங்களில் கணக்கு வைக்காமல் இருந்திருந்த நயன்; இன்ஸ்டாவில் அக்கவுண்ட் ஓபன் செய்ததற்கு ஜவான் படமே காரணம் என்றும் ஒரு பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: இந்நிலையில் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூவை நயன் தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர், உலக் ஆகியோருடன் கொண்டாடினார். விக்னேஷ் சிவன் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார். நயன் வெள்ளை நிற சுடிதாரில் இருந்தார். அதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X