அதான் அரசியல்ல கூப்பிடறாங்களே.. போக வேண்டியதுதானே! - நமீதாவை 'விரட்டும்' புது நடிகை

By Shankar

'அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்' என்று சொல்லிக் கொண்டு அவரது நாற்காலியை பிடுங்கி விடுகிற ஆர்வத்தோடு போயஸ் கார்டன் பக்கமாகவே சுற்றி வருகிறார்கள் சில ஹீரோக்கள்.

அவர்கள் பிரச்சனை அது என்றால், 'நமீதா இடம் நமக்குதான்' என்று கொஞ்ச நாட்களாக நமீதா இடத்துக்கு ரூட் போட்டுக் கொண்டிருக்கிறார் ஒரு நடிகை.

அவர் பெயர் நித்யா. 'நான்தான் சின்ன நமீதா' என்றும் கூறிக் கொள்ளும் இவர், தற்போது திமிர திமிர கவர்ச்சி காட்டி வரும் படம் 'சாய்ந்தாடு சாய்ந்தாடு'.

மூக்கு, முகவெட்டு உள்ளிட்ட முக்கியமான ஏரியாக்களில் கூட நமீதாவை ஞாபகப்படுத்தி வரும் இவர் நமீதாவின் இடத்தை பிடிக்க ஆர்வம் காட்டுவதில் தப்பில்லைதான். ஆனால்?

இடத்தை காலி பண்ணுங்க

இடத்தை காலி பண்ணுங்க

‘நமீதா... சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்க' என்று சத்யாகிரஹம் பண்ணுகிற அளவுக்கு இவர் தொடர்ந்து பேசி வருவதுதான் ‘தாங்க முடியல' பாணியாக இருக்கிறது.

அதான் அரசியல்ல கூப்பிடறாங்களே

அதான் அரசியல்ல கூப்பிடறாங்களே

‘சாய்ந்தாடு சாய்ந்தாடு' படப்பிடிப்புக்காக புதுக்கோட்டையில் இருந்த இந்த சின்ன நமீதா நித்யாவிடம் ஏரியா நிருபர் ஒருவர் பேட்டிக்காக வந்திருந்தார். அவரது கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் சொல்லி வந்த நித்யா, ஒரு கட்டத்தில் ‘நமீதா இடத்தை காலி பண்ண வேண்டிய நேரம் வந்தாச்சு. அதான் அவரை அரசியலில் சேர்வதற்காக கூப்பிடுறாங்களே, போக வேண்டியதுதானே?' என்றெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

நேர்ல பாக்கணும்தான்

நேர்ல பாக்கணும்தான்

வந்திருந்த நிருபருக்கே அதிர்ச்சி. ‘இப்படியெல்லாம் பட்டவர்த்தனமா பேசுறீங்களே? நமீதா கோபிக்க மாட்டாரா?' என்று கேள்வி எழுப்பினார்.

'என்னை ஒருமுறை நேர்ல பார்த்தா அவருக்கு அந்த சந்தேகமே வராது. கோபிக்கவும் மாட்டார். நானும் அவரைச் சந்திக்கணும்னுதான் வெயிட் பண்றேன்,' என்றார் நித்யா.

சாபக்கேடு

சாபக்கேடு

யாராவது யாருடைய இடத்துக்காகவாது சண்டை போடுவதே கோடம்பாக்கத்தின் சாபக்கேடு ஆகிவிட்டது. ஆனால் இந்த போட்டியை பார்த்தால், இருவரில் கீழே யார் விழுந்து புரண்டாலும் ரசிகர்களுக்குதான் கொண்டாட்டம்.

சீக்கிரம் சண்டைய ஆரம்பிங்க நடிகைகளே...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X