பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு?.. இப்படி மாறிட்டாங்களே பாஸ்.. இதுவும் அழகுதான்
சென்னை: தமிழில் இப்போது டாப்பில் இருக்கும் ஹீரோயின்களில் ஒருவர் பூஜா ஹெக்டே. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அனைத்து பிரச்னைகளும் முடிந்து விரைவில் அந்தப் படம் ரிலீஸாகும் என தெரிகிறது. இந்நிலையில் அவரது புதிய கெட்டப் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிலிருந்து தன்னுடைய கரியரை ஆரம்பித்தவர் பூஜா ஹெக்டே. அந்தப் படம் படுதோல்வியடைந்ததால் பூஜாவின் நடிப்பும் கவனிக்கப்படாமல் போனது. அதற்கு பிறகு தென்னிந்திய சினிமாவுக்கு பை சொல்லிவிட்டு பாலிவுட்டிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தினார். அதன் பலனாக அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து; அங்கு குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறினார்.

தமிழில் ரீ என்ட்ரி: இடையே தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகவெல்லாம் நடித்துக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட சூழலில் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படத்தில் மீண்டும் அவரை ஹீரோயினாக அழைத்து வந்தார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். பூஜாவின் ராசியோ என்னவோ ரீ என்ட்ரி கொடுத்த படமும் தோல்விதான். அதேசமயம் பூஜா சென்சேஷனல் ஆகிவிட்டார். இதனால் அடுத்தடுத்து தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன.
டாப்பில் மார்க்கெட்: அந்தவகையில் சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் நடித்தார். கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு நடனம் ஆடினார். வரிசையாக் பிஸியாக இருந்தாலும் அவர் நடித்த படங்கள் தோல்விதான் அடைகின்றன. ஆனாலும் வாய்ப்புகள் வருவது மட்டும் குறையவில்லை. அடுத்ததாக அவர் விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன் படத்திலும் நடித்தார். அந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வருவதாக இருந்தது.
பிரச்னையில் ஜனநாயகன்: இந்தப் படத்தை அதீதமாகவே நம்பிக்கொண்டிருக்கிறார் பூஜா. ஆனால் அந்தப் படத்துக்கு ஏற்பட்ட சில சிக்கல்கள் தீராததால் இன்னமும் ரிலீஸாகமால் முடங்கியிருக்கிறது. விரைவில் அத்தனையும் முடிந்து ரிலீஸாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட் நிலவரம் இப்படி இருக்க பாலிவுட்டில் கடைசியாக அவர் வருண் தவானுக்கு ஜோடியாக Hai Jawani Toh Ishq Hona Hai திரைப்படம் வெளியானது.
பூஜா ஹெக்டேவின் கெட்டப்: ஆனால் அதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் பூஜா ஹெக்டேவின் புதிய கெட்டப் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது இவ்வளவு நாட்கள் அவர் நீளமான முடியை வைத்திருந்தார் அல்லவா; அதனை இப்போது வெட்டியிருக்கிறார். ஏறக்குறைய பாப் கட்டிங் மாதிரியே இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்களோ பூஜா ஹெக்டே எப்படி இருந்தாலும் அழகாக தெரியுறாங்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
