ரொம்ப பயமா இருக்கு.. எல்லோரிடமும் கத்தி.. திரை பிரபலங்களிடம் புலம்பும் விஜய்?

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்தான் இப்போது இந்தியாவிலேயே ட்ரெண்டிங். கட்சி ஆரம்பித்த சில வருடங்களில் சந்தித்த முதல் தேர்தலிலேயே சம்பவம் செய்துவிட்டார் அவர். சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் அவர் பேசியது ஆதரவையும், கண்டனத்தையும் ஒருசேர பெற்றிருக்கிறது. இந்நிலையில் அவர் ரொம்பவே அச்சத்தில் இருபப்தாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

முதலமைச்சராக பதவியேற்ற பின் விஜய்; பல சங்கடங்களை சந்தித்துவருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னால் முடிந்த அளவுக்கு உழைக்க அவர் தயாராக இருந்தாலும்; அவரது செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்தையே சந்தித்துவருகின்றன. அதற்கேற்றபடிதான் அவரது செயல்பாடுகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் நடக்கும் எந்த முக்கியமான பிரச்னைகளுக்கும் அவர் இதுவரை வாய் திறக்கவில்லை. மேலும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்றும் சந்திக்காமல் இருக்கிறார்.

Vijay Feels Scared In Politics Reports About CM s Private Remarks Go Viral
Photo Credit:

சட்டப்பேரவை பேச்சு: இப்படிப்பட்ட நிலைமையில்தான் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் உரையாற்றினார் அவர். அப்போது முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கலாய்க்கும் விதமாக அவர் சொன்ன குட்டி ஸ்டோரி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடன் கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், வீரபாண்டி உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Also Read
இவ்வளவு அழகாக இருக்கீங்களே சிம்பு.. அப்படி மட்டும் செய்யுங்க.. எஸ்டிஆருக்கு அட்வைஸ் செய்த விஜய்
இவ்வளவு அழகாக இருக்கீங்களே சிம்பு.. அப்படி மட்டும் செய்யுங்க.. எஸ்டிஆருக்கு அட்வைஸ் செய்த விஜய்

கொண்டாடும் தவெகவினர்: ஆனால் தவெகவினரோ விஜய்யின் பேச்சை கொண்டாடிவருகிறார்கள். பேசு பேசு என்று சொன்னீர்கள்; இப்போது தங்கள் தளபதி எப்படி பேசியிருக்கிறார் பார்த்தீர்களா?.. இனிமேல் அவரது ஆட்டத்தை உங்களால் கணிக்கவும் முடியாது; கட்டுப்படுத்தவும் முடியாது என்று சோஷியல் மீடியாவில் கூறிவருகிறார்கள்.

தீர்க்கமான முடிவில் விஜய்: தன் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள், கிண்டல்கள் வீசப்பட்டாலும் எப்படியாவது அதையெல்லாம் தாங்கிக்கொண்டு ஐந்து வருடங்களை முதலமைச்சராக நிறைவு செய்திட வேண்டும் என்பதில் ரொம்பவே தீர்க்கமாக இருக்கிறாராம். அதுமட்டுமின்றி தன் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் யாரும் தனக்கு துரோகம் செய்துவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையையும் அளவுக்கதிகமாகவே வைத்திருக்கிறார். அதேசமயம் இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஏகப்பட்ட திருப்பங்கள் காத்திருக்கின்றன என நேற்றிலிருந்து ஒரு தகவல் சுற்றுகிறது.

திரை பிரபலங்களுடன் சந்திப்பு: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க வாரத்துக்கு குறைந்தபட்சம் திரைத்துறையை சேர்ந்த ஐந்து பேரையாவது சந்தித்துவிடுகிறார் விஜய். நேற்றுகூட வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு, பாடலாசிரியர் விவேக், விஜே ரம்யா உள்ளிட்டோர் சந்தித்தார்கள். சில நாட்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆண்டனியுடன் விஜய்யை சந்தித்தார். இன்னும் பலர் அவரை சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புலம்பும் விஜய்?: இந்நிலையில் தன்னை சந்திக்க வந்த சிலரிடம்; அரசியலில் இருப்பது குறித்த அனுபவத்தை அவர் ஷேர் செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதாவது தனக்கு நெருக்கமான திரை நண்பர்களிடம், 'இந்த ஃபீல்டில் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பயமாக இருக்கிறது. அனைவருமே கத்தி வைத்து சுற்றிக்கொண்டிருப்பது மாதிரியே உள்ளது' என புலம்பி தள்ளிவிட்டதாக பனையூர் மற்றும் கோட்டைக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

விஜய் புலம்புவதை பார்த்த நண்பர்களோ, அனைத்தையும் செய்து காட்டிய உங்களுக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம் என்று தைரியம் சொல்லிவிட்டு வருகிறார்களாம். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்களோ, 'தைரியமாக இருங்கள் தளபதி. உங்களுக்கு மக்கள் துணையும், எங்கள் துணையும் இருக்கிறது' என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X