Priyanka Mohan - என் கரியரை காலி செய்ய பார்க்குறீங்களா?.. தொகுப்பாளரிடம் கொந்தளித்த பிரியங்கா மோகன்
சென்னை: நடிகை பிரியங்கா மோகன் தற்போது கோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அடுத்தாக தெலுங்கில் இரண்டு படங்களும், தமிழில் ஒரு படமும் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கன்னட படமான ஒந்த் கத்தே ஹெல்லா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அடிப்படையில் பொறியாளரான இவர் அவ்வப்போது மாடலிங்கிலும் ஈடுபட்டுவந்ததால் திரைத்துறை கதவு திறந்தது. முதல் படத்தை விக்ரம் குமார் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் பிரியங்கா மோகனின் நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.

தமிழில் அறிமுகம்: சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா மோகன். படம் மெகா ஹிட்டானது மட்டுமின்றி பிரியங்கா மோகனின் நடிப்பும் பலமான வரவேற்பையே பெற்றது. இதனால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.
பிஸி பிரியங்கா: டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். கடைசியாக தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். இப்படி பிஸியாக இருக்கும் பிரியங்கா மோகன் விரைவில் டாப் நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் கைவசம் படங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டிக் டாக்: இதற்கிடையே தமிழில் அவர் நடிப்பில் டாக்டர் படம் முதலில் வெளியானாலும் அதற்கு முன்னதாகவே டிக் டாக் என்ற படத்தில் கமிட்டாகி நடித்துவிட்டார் என கூறப்படுகிறது. அந்தப் படமானது சில தினங்களுக்கு முன்புதான் வெளியானது. அதன் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஷாக் இருந்தது. ஏனெனில் ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகன்; டிக் டாக் படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார்.
Vidaamuyarchi - அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.. விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா?
கேப்டன் மில்லர்: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் நடித்து கலக்கியிருந்தார் பிரியங்கா. ஆனாலும் படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. அதேசமயம் அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. அடுத்ததாக பிரியங்கா மோகன் நடிப்பில் தெலுங்கில் ஓஜி, சரிபோதா சனிவரம் ஆகிய படங்களும், தமிழில் பிரதர் என்ற படமும் வெளியாகவிருக்கின்றன. இவை தவிர்த்து அவர் வேறு சில படங்களிலும் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.
Director Rathnakumar: கார்த்தியின் சர்தார் 2 படத்தில் இணைந்த ரத்னகுமார்.. அப்ப லோகேஷ் கூட்டணி?
கரியரை காலி செய்ய பார்க்குறீங்களா?: இந்நிலையில் பிரியங்கா மோகன் சமீபத்தி ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தொகுப்பாளர், 'நீங்கள் சினிமாவில் மோசமான அனுபவத்தை சந்தித்திருக்கிறீர்களா’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பிரியங்கா மோகன், இப்போதுதான் சினிமாவில் நான் அறிமுகமாகியிருக்கிறேன். அதற்குள் எனது கரியரில் மோசமான அனுபவம் என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது. எனது சினிமா கரியரை முடிக்க பார்க்கிறீர்களா என்று எதிர்கேள்வி கேட்டு வாயை அடைத்தார். அவரது பதில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











