விஜய் - திரிஷா விவகாரம்.. ராதிகா இப்படி சொல்லிட்டாங்களே ப்பா.. என்ன சொன்னாங்க பாருங்க
சென்னை: விஜய்யும் திரிஷாவும் கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருக்கிறார்கள். சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்ததிலிருந்தே அவர்கள் இரண்டு பேரும் ஜோடியாகவே இருக்கிறார்கள். இது விஜய் மீது பெரிய விமர்சனங்கள் எழுவதற்கு காரணமாகவும் இருக்கின்றன. இந்நிலையில் சீனியர் நடிகையான ராதிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
விஜய்யும், திரிஷாவும் கில்லி திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தார்கள். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஒரு ஜோடி நடித்து அந்தப் படம் மெகா ஹிட்டாகிவிட்டால்; தொடர்ந்து அவர்களையே ஹீரோ, ஹீரோயினாக புக் செய்யும் சென்ட்டிமென்ட் விஜய் - திரிஷாவுக்கும் நடந்தது. அதன் காரணமாக அவர்கள் திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் வரிசையாக நடித்தார். அவற்றில் திருப்பாச்சி மட்டும்தான் சூப்பர் ஹிட்டடித்தது.

லியோவில் இணைந்த ஜோடி: குருவி படத்துக்கு பிறகு பத்து வருடங்கள்வரை இணைந்து நடிக்கவில்லை. இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால் தேவையில்லாத கிசுகிசுக்கள் கிளம்புவதால்; சங்கீதாவும், எஸ்.ஏ.சியும் இந்த கண்டிஷனை வைத்ததாக அப்போது பேச்சு உண்டு. சூழல் இப்படி இருக்க பல வருடங்களுக்கு பிறகு லியோ படத்தில் மீண்டும் சேர்ந்து நடித்தார்கள் இரண்டு பேரும். வழக்கம்போல் இதிலும் அந்த ஜோடியை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
ரியல் ஜோடி?: அந்தப் படத்துக்கு பிறகு விஜய்யுடன் அடிக்கடி தனியாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டார் திரிஷா. அது அப்போதே சர்ச்சையானது. இப்படிபட்ட நிலைமையில்தான் சங்கீதாவின் விவாகரத்து மனுவில் இருக்கும் விஷயங்கள் எல்லாம் வெளியே கசிந்தன. அதில் ஒரு நடிகையுடன் தன் கணவர் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும்; அவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கும் சென்று வந்தார்கள் என்றும் புகார்களை அடுக்கியிருந்தார். அனைவரும் அது திரிஷாவாகத்தான் இருக்கும் என சந்தேகித்தார்கள்.
தொடர்ந்து அப்படி: அந்த விஷயங்கள் வெளியே வந்த நாளிலிருந்து சமீபத்திய விஜய்யின் பிறந்தநாள் வரை திரிஷாவும், விஜய்யும் பொதுவெளிகளுக்கு சேர்ந்தே வருகிறார்கள். பிறந்தநாளை கூட திரிஷாவுடன்தான் கொண்டாடினார் விஜய். இதையெல்லாம் பார்த்த தவெகவினோ, ஒன்று சங்கீதாவுடன் சேருங்கள் அல்லது முறையாக விவாகரத்து கொடுத்துவிட்டு திரிஷாவுடன் இருங்கள்: இது என்ன முறையற்று நடந்துகொள்வது என வேதனையை வெளிப்படுத்துகிறார்கள். எதிர்க்கட்சியினரும் இந்த விஷயத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதிகா பேட்டி: இந்நிலையில் சீனியர் நடிகைகளில் ஒருவரான ராதிகாவிடம் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது விஜய் - திரிஷா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அரசியல் செய்ய வந்துவிட்டால் நீங்கள் மக்களுக்கான மனிதராக இருக்க வேண்டும். எம்ஜிஆர், என்டிஆர், ஜெயலலிதா ஆகியோர் எல்லாம் சினிமாவிலிருந்து வந்தவர்கள்தான். அவர்கள் வந்த காலகட்டம் வேறு. அவர்கள் வந்தபோது மக்களின் சிந்தனையே வேறாக இருந்தது. சமூக அக்கறை வேறாக இருந்தது.
அதெல்லாம் பெர்சனல்: இப்போது 2026ல் சோஷியல் மீடியா வளர்ந்துவிட்டது. அது பெரிய வாய்ஸை கொடுக்கிறது. அதில் எது உண்மை, பொய் என்பதை தெரிந்துகொள்வதே பெரிய வேலையாக இருக்கிறது. இப்போது அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு பெரிய சவால் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களுக்கான மனிதராக இருக்க வேண்டும். மற்றபடி யாருடைய பெர்சானல் வாழ்க்கையிலும் நான் செல்லவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications
