யப்பா எவ்வளவு பாசம்.. மகள் திருமணத்துக்கு வந்த பாரதிராஜா.. ராதிகா செய்ததை பாருங்க.. பார்க்கவே கலங்குது
சென்னை: பாரதிராஜா இயக்கத்தில் நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில், கிழக்கு சீமையிலே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அந்த இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி; ராதிகாவை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்து சென்றது. இநிந்லையில் பாரதிராஜா - ராதிகா தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி; பார்க்கும்போதே கண்கள் கலங்க வைக்கிறது.
இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகை என்ற பெயர் எடுத்தவர் ராதிகா. அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. கிழக்கே போகும் ரயில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ராதிகாவை அழைத்து சென்று இவர்தான் ஹீரோயின் என்று அவர் சொன்னபோது அங்கே இருக்கும் யாருமே நம்பவும் இல்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால் ராதிகா அப்படி இருந்தவர்களை தனது திறமையான நடிப்பு மூலம் உடனடியாக கவர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்துவம் வந்துவிடும்: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தார். முன்னணி ஹீரோயினாக கலக்கிய அவர் பல ஹிட் படங்களில் நடித்தார். அவர் எத்தனையோ இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தாலும்; பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிக்கும்போது மட்டும் ஒரு தனித்துவம் வந்துவிடும். நடிகையாக ராதிகாவின் முதல் இன்னிங்ஸை தொடங்கி வைத்தது போன்றே; கிழக்கு சீமையிலே படத்தின் மூலம் குணசித்திர நடிகையாக இரண்டாவது இன்னிங்ஸையும் தொடங்கி வைத்தார் இயக்குநர் இமயம்.
சூப்பர் நடிப்பு: அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விஜயகுமாருக்கு தங்கையாக நடித்திருந்த ராதிகா; தனது ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அண்ணனுக்காக கையை அறுத்துகொள்வது, கணவரையும் விட முடியாமல், அண்ணனையும் நாட முடியாமல் இடையில் சிக்கிக்கொண்டு தவிப்பது என ஒவ்வொரு சீனிலும் மிரட்டியிருப்பார். குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே இந்தப் படத்தில் அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது. 'நீ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வா.. உன்னை எப்படி நடிக்க வைக்க வேண்டுமென எனக்கு தெரியும்' என மருத்துவமனையில் சொல்லி அழைத்து வந்தார் பாரதிராஜா.
ஆரூடம் சொன்ன பாரதிராஜா: அண்மையில் அவர் உயிரோடு இருந்தபோதுகூட மருத்துவமனைக்கு என்று நேரில் சந்தித்தார் ராதிகா. அப்போது தாய் கிழவி திரைப்படத்துக்கு உனக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என ஆரூடம் கூறியிருந்தார் குருநாதர். அவர் சொன்னது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சூழல் இப்படி இருக்க நேற்று அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். தேனியில் இன்று பாரதிராஜா அடக்கம் செய்யப்படுகிறார். இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் சோகத்தில் இருக்கிறது.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது, ராதிகாவின் மகள் ரயானே திருமணத்துக்கு பாரதிராஜா சென்றிருந்தார். தன் குருநாதரை பார்த்ததும் மலர்ச்சியோடு சிரித்து வரவேற்ற ராதிகா; அவரை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டு சிறு பிள்ளை போல் மகிழ்ச்சியோடு இருந்தார். பாரதிராஜாவும் தந்தை ஸ்தானத்தில் இருந்து அணைத்து தட்டிக்கொடுத்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, இரண்டு பேரும் எவ்வளவு பாசமா இருக்காங்க. பார்க்கும்போதே கலங்குது. ராதிகாவுக்கு இது பெரிய இழப்பு என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
