ரஜினிகாந்த்தின் தர்மன்.. ஏற்கனவே இரண்டு ஹீரோயின்கள்.. இப்போ இன்னொருவரா?.. யார் தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்துக்கு தர்மன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை அஷ்வத் மார்முத்து இயக்குகிறார். சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோரும் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படமானது பற்ற வைத்திருக்கிறது. இந்நிலையில் படத்தில் கமிட்டாகியிருக்கும் நடிகை குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ரஜினியை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்துக்கு இயக்குநரை இறுதி செய்வதற்குள் அவர்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. முதலில் கே.எஸ்.ரவிக்குமாரை ஃபிக்ஸ் செய்ய போடப்பட்ட திட்டம் சரியாக வரவில்லை. அதனையடுத்து சுந்தரி.சி உள்ளே வந்தார். அவரும் சில நாட்கள் கழித்து வெளியேறிவிட்டார். அவரைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி கமிட்டானார். ஆனால் அவரும் அதிலிருந்து சில காரணங்களால் எக்ஸிட் ஆகிவிட்டார். இதனால் ரஜினியின் ரசிகர்கள் குழம்பிப்போனார்கள்.

அஷ்வத் மாரிமுத்து இயக்குநர்: வருபவர்கள் எல்லாம் உடனே உடனே வெளியே போனால் யார்தான் இந்தப் படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. டிராகன் பட சமயத்தில் ரஜினியிடம் அஷ்வத் மாரிமுத்து சொன்ன லைன் பிடித்துப்போக; அதனை டெவலப் செய்ய சொல்லியிருக்கிறார்கள். அஷ்வத்தும் இரண்டு ஜாம்பவான்களோடு பணியாற்றும் வாய்ப்பினை விட்டுவிடக்கூடாது என்பதற்காக சூப்பராக டெவலப் செய்தார்.
ரஜினிகாந்த்தின் தர்மன்: அவர் சொன்ன கதை ரஜினி, கமல் ஆகியோருக்கு பிடித்துப்போக; அஷ்வத்தையே இயக்குநராக கமிட் செய்தார்கள். படத்துக்கு தர்மன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் ரஜினியுடன் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏற்கனவே ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருந்தார் சிம்ரன். இந்தப் படத்தின் மூலம் அவருடன் இரண்டாவது முறையாக நடிக்கிறார். இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கமிட்டான மீனாட்சி சௌத்ரி: அதாவது இப்படத்தில் கோட் படத்தில் ஹீரோயினாக நடித்த மீனாட்சி சௌத்ரியையும் நடிக்க கமிட் செய்திருக்கிறாராம் இயக்குநர். ஏற்கனவே சிம்புவை வைத்து அவர் இயக்கவிருந்த படத்தில் மீனாட்சியை கமிட் செய்திருந்தார். தற்போது இதிலும் அழைத்து வந்திருக்கிறாராம். படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் என்பதால் ரசிகர்களிடையே மேற்கொண்டு ஆவல் படம் குறித்து எழுந்திருக்கிறது.
படம் எப்படி இருக்கும்?: இந்தப் படத்தின் மீது பெரும்பாலானோருக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்னதாக அஷ்வத் இயக்கிய டிராகன், ஓ மை கடவுளே ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. எனவே அவர் ரஜினியை அவ்வளவு அலட்சியமாக கையாண்டுவிடமாட்டார் என்று நம்பலாம். அதுமட்டுமின்றி அவரும், 'இந்தப் படம் எந்தப் படத்தின் காப்பியோ, வெப் சீரிஸின் தாக்கமோ இல்லை. இது படையப்பா, வேட்டையாடு விளையாடு ஆகிய இரண்டு படங்களின் கலவையாக இருக்கும். இது வரலாற்றுப்பூர்வமானது. இரண்டு ஜாம்பவான்களுக்கு சரியாக படம் செய்து கொடுத்துவிட வேண்டும்' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
