“விடாம செய்றது தான் எனக்கு ரொம்ப புடிக்கும்”: ரம்யா நம்பீசனுக்கு இப்படியும் ஒரு ஆசை இருக்குதா?

திருவனந்தபுரம்: தமிழ், மலையாளம் படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் ரம்யா நம்பீசன்.

Recommended Video

ரம்யா நம்பீசனுக்கு இப்படியும் ஒரு ஆசை இருக்குதா?

ஒல்லியாக இல்லாமல் பப்ளியாக இருப்பதே ரம்யா நம்பீசனின் அழகுக்கு காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அவர் இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு, "எனக்கு விடாம செய்றது தான் புடிக்கும்" என பதிவிட்டுள்ளார்.

இப்படியா கேவலமா பாட்டு எழுதுறது.. விளாசும் நெட்டிசன்கள்.. விஜய் தேவரகொண்டா போட்ட ட்வீட்!'

கடவுள் தேசத்து கட்டழகி

கடவுள் தேசத்து கட்டழகி

மலையாள சினிமாவின் தனிச்சிறப்பே, கதைக்குத் தேவையான நடிகைகளை மட்டுமே அந்தந்த படங்களில் நடிக்க வைப்பது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மாதிரி ஒல்லியான நடிகைகளை தேடிப்போக வாய்ப்பில்லை. அப்படி தான் கடவுள் தேசத்திலிருந்து ரம்யா நம்பீசன் என்றொரு கட்டழகி, ‘சயன்னம்' படத்தில் அறிமுகமானார். 201.ல் வெளியான இந்தப் படம், ரம்யாவுக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்தது.

கோலிவுட், டோலிவுட்டில் அறிமுகம்

கோலிவுட், டோலிவுட்டில் அறிமுகம்

மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ரம்யா நம்பீசன், பப்ளியாக இருப்பதையே தனது வசீகரமாக மாற்றிக் கொண்டார். ஆனாலும், நடிப்பில் கொஞ்சமும் குறைவைக்காத ரம்யாவுக்கு, தமிழ், தெலுங்கு படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகள் தேடிப் போனது. தமிழில் ‘ஒருநாள் ஒரு கனவு', ‘ராமன் தேடிய சீதை', 'குள்ளநரிக் கூட்டம்' என நடித்திருந்த ரம்யா நம்பீசனுக்கு, விஜய் சேதுபதியுடன் நடித்த ‘பீட்சா' செம்ம கம்பேக் கொடுத்தது.

ரம்யா வெர்சனில் ஊ சொல்றியா மாமா

ரம்யா வெர்சனில் ஊ சொல்றியா மாமா

விஜய் சேதுபதிக்கும் ரம்யா நம்பீசனுக்கும் கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க் அவுட் ஆனது. பீட்சாவைத் தொடர்ந்து இருவரும் ஜோடி சேர்ந்த ‘சேதுபதி' படத்தில், தனது லுக்காலே ரசிகர்களை சொக்க வைத்தார். நடிகையாக மட்டும் இல்லாமல், பாடகியாகவும் ஜொலித்து வருகிறார். 'புஷ்பா' படத்தில் சமந்தா குத்தாட்டம் போட்ட ‘ஊ சொல்றீயா மாமா' பாடல், அதிரிபுதிரியாக ஹிட் அடித்தது. இந்தப் பாடலின் மலையாள வெர்ஷனை, ரம்யா நம்பீசன் தான் பாடியிருந்தார். அவரது குரலில் ‘ஊ சொல்றீயா மாமா' பாடலை கேட்பவர்கள் கிறங்காமல் இருக்க முடியாது என ரசிகர்கள் கூறி வந்தனர்.

திடீரென வைரலாகும் வீடியோ

திடீரென வைரலாகும் வீடியோ

தமிழில் ரேஞ்சர், பிரபுதேவாவுடன் பகீரா விஜய் ஆண்டனியுடன் ரத்தம் ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் ரம்யா நம்பீசன், தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். கறுப்பு நிற டிராக், டீஷர்ட் அணிந்துள்ள ரம்யா, தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார். மேலும், "ஒர்க் அவுட் செய்தால் உடல் ஃபிட்டாக இருக்கும் அல்லது ஃபேட்டாகி விடும். எனக்காக ஒர்க் அவுட் செய்கிறேன். மற்றவர்களுக்காக நான் இதனை செய்யவில்லை. ஜிம்முக்கு செல்வது உடலுக்கும் ஆன்மாவுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை விடாமல் செய்வதில்தான் வெற்றி இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X