கர்ப்பமாக இருந்தாலும் ரெஸ்ட் எடுக்காத சமந்தா.. ஓடிடியில் களமிறங்குறாங்களே.. சூப்பர் சர்ப்ரைஸ்
சென்னை: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிஸியான நடிகையாக இருப்பவர். முதலில் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த அவர்; சில காரணங்களால் விவாகரத்து பெற்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ் நெடிமோருவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இப்போது கர்ப்பமாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் திரை கரியரை ஆரம்பித்த சமந்தா குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறிவிட்டார். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் கோலிவுட்டில் வளர்ந்தது அனைவருக்குமே மகிழ்ச்சியைத்தான் உண்டு செய்தது. கோலிவுட்டில் எப்படி பிஸியானாரோ அதேபோல் டோலிவுட்டிலும் பிஸியானார். அந்த சமயத்தில்தான் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே அவர்கள் பிரிந்துவிட்டார். மேலும் மையோசிடிஸ் நோயாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார் சாம்.

மீண்டும் நடிக்க வந்த சமந்தா: மையோசிடிஸ் நோயிலிருந்து மெல்ல மெல்ல மீண்ட அவர்; திரைத்துறையில் இரண்டாவது இன்னிங்ஸையும் தொடங்கினார். அதன்படி அவர் நடித்த குஷி, சாகுந்தலம் ஆகிய படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தன. இனிமேல் சமந்தா அவ்வளவுதான் என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்த சூழலில்தான்; ராஜ் இயக்கத்தி சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்தார். அந்த வெப் சீரிஸில் ஆக்ஷன் சீன்களில் எல்லாம் கலக்கி எடுத்திருந்தார்.
இரண்டாவது திருமணம்: மேலும் ராஜுடன் சாமுக்கு காதலும் மலர; கடந்த வருடத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் வைத்து சிம்ப்பிளாக திருமண செய்துகொண்டார்கள். இரண்டு பேருக்குமே அது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் ஐடியல் ஜோடியாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள். சினிமாவிலும் சாம் பிஸியாக நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பி மா இன்ட்டி பங்காரம் திரைப்படத்தில் நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
கர்ப்பமாக இருக்கும் சமந்தா: அப்படத்தின் வெற்றி விழாவில் ராஜுடன் கேக் வெட்டினார். அப்போது சமந்தாவின் வயிறு கொஞ்சம் பெரிதாக இருந்ததை பார்த்து அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என ரசிகர்கள் சந்தேகப்பட்டார்கள். அதனை சில நாட்களிலேயே அவரும் உறுதி செய்துவிட்டார். அதுமட்டுமின்றி கர்ப்ப கால விடுமுறையில் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சாம் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்ட அவரது ரசிகர்கள்; நீங்கள் நடிக்கவே வேண்டாம் நல்லபடியாக ரெஸ்ட் எடுங்கள் மேடம் என அட்வைஸ் செய்தார்கள்.
சமந்தாவின் முடிவு: இந்நிலையில் சமந்தா புதிய முடிவை எடுத்திருக்கிறார். அதன்படி சோனி லிவ் ஓடிடி தளத்துடன் கைகோர்த்திருக்கிறார் அவர். அந்த ஓடிடியில் வரும் ஏதேனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறாரா அல்லது அந்த ஓடிடிக்காக வெப் சீரிஸில் நடிக்கப்போகிறாரா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வரும். இதுகுறித்து சமந்தா பேசுகையில், "மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், புதிய தொடக்கங்களை வரவேற்கவும் இந்த வருடம் எனக்கு கற்று கொடுத்திருக்கிறது.
சோனி லிவ் தமிழுடன் இணைந்து இந்த புதிய அத்தியாயத்தை தொடங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிகச்சிறந்த ஒரு சுவாரஸ்யமான புராஜெக்ட்டுக்காக நாங்கள் உழைத்துவருகிறோம்.அதை பற்றிய விவரங்களை மிக விரைவில் உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
