Blast Box Office - பிளாஸ்ட் வசூல் இத்தனை கோடியா?.. ஆத்தாடி பாக்ஸ் ஆஃபிஸ் ரகளையா இருக்கே ப்பா
சென்னை: அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பிளாஸ்ட் திரைப்படம் கடந்த மாதத்தில் தியேட்டர்களில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட அந்தப் படத்தை பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக இருந்த சுபாஷ் கே.ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். இந்நிலையில் அந்தப் படம் இதுவரை மொத்தம் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் இப்போதைய சென்சேஷனலாக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். அவரிடம் உதவி இயக்குநராக இருந்து வேலை கற்றுக்கொண்டவர் சுபாஷ் கே.ராஜ். ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு ஹிட் படங்களை கொடுத்தவர் பிரதீப். எனவே சுபாஷ் சொன்ன கதை மீது அந்த நிறுவனத்திற்கு நம்பிக்கை ஏற்பட்டதால்; பிளாஸ்ட் படத்தை தயாரிக்க முன்வந்தது. இதில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

எப்படி இருந்தது படம்?: தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை பெண்களை மையப்படுத்திய கதைகள் வருவது சமீபமாக அதிகரித்திருக்கின்றன. மலையாளத்தில் அடிக்கடி அந்த ஜானரில் சினிமாக்கள் வந்த சூழலில்; தமிழிலும் கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்கள் வந்து ஹிட்டடித்தன. அந்த வரிசையில் இணைந்தது பிளாஸ்ட் திரைப்படம். இதில் இரண்டு ஹீரோயின்களுக்கும் பக்காவான சண்டை காட்சிகளை வைத்து மெர்சல் செய்துவிட்டார் இயக்குநர்.
அட்டகாசமான நடிப்பு: அபிராமியும், ப்ரீத்தி முகுந்தனும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ரோல் அரிதான் ஒன்று என்பதை உணர்ந்தே இருந்தார்கள். அதன் காரணமாக அதனை பயன்படுத்தி பெயர் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் உழைக்க; ஆக்ஷன் காட்சிகளில் அவர்களை பார்க்கும்போது தியேட்டர்களில் விசில் சத்தம் பறந்தன. இவர்கள் இரண்டு பேரும் இப்படி சண்டை போடுகிறார்களே என ஆச்சரியத்தில் உறைந்தே போனார்கள்.
வசூல் நிலவரம்: வெறும் ஆக்ஷனில் மட்டும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்; ஒட்டுமொத்த கதையையுமே பெண்களுக்கு முக்கியத்துவம் தரும்படிதான் பின்னியிருந்தார் இயக்குநர். எனவே பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்க; விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் உலகம் முழுவதும் அந்தப் படம் செய்திருக்கும் வசூல் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.
ஏஜிஎஸ் காட்டில் மழைதான்: அதன்படி உலகம் முழுவதும் இதுவரை 70 கோடி ரூபாய்க்கும் மேல் பிளாஸ்ட் வசூல் செய்திருக்கிறதாம். அறிமுக இயக்குநரின் படம் இவ்வளவு வசூல் செய்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக ஏஜிஎஸ் நிறுவனம் கடைசியாக தயாரித்த படங்களில் இதுவும், டிராகன் திரைப்படமும் வசூலில் மிரட்டிவிட்டன. இதனால் அந்த தயாரிப்பு நிறுவனம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது.
அடுத்த படம்: பிளாஸ்ட் திரைப்படத்தின் வெற்றி அந்த இயக்குநரின் மீதும் பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. அடுத்ததாக அவர் சியான் விக்ரமை வைத்து படம் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிளாஸ்ட் படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் விக்ரம்தான் நடிக்கவிருந்ததாகவும்; அப்போது மிஸ் ஆனதை அடுத்த படத்தில் சுபாஷ் நிறைவேற்ற தயாராக இருக்கிறாராம். விரைவில் அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
