Gatta Kusthi 2 Day 1 Box Office - கட்டா குஸ்தி 2 முதல் நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் சூப்பர்

சென்னை: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியிருக்கிறார். முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றதன் காரணமாக இந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அந்த ஹைப்போடு நேற்று திரையரங்குகளில் படம் வெளியானது. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விஷ்ணு விஷால். ஒவ்வொரு படத்தின் கதையையும் கவனமாக தேர்ந்தெடுக்கும் அவர்; கடந்த 2022ஆம் ஆண்டு ஹீரோயின் சென்ட்ரிக் படமாக உருவான கட்டா குஸ்தி படத்திலும் ஹீரோவாக நடித்தார். பெரும்பாலான ஹீரோக்கள் அப்படி நடிப்பதற்கு தயக்கம் காட்டுவார்கள். ஆனால் கதை மீது வைத்திருந்த பெரிய நம்பிக்கை காரணமாக அதில் நடித்தார் விஷ்ணு. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

Gatta Kusthi 2 Day 1 Box Office Collection - Vishnu Vishal s Film Opens With 2 55 Crore
Photo Credit:

கட்டா குஸ்தி 2: அந்தப் படத்துக்கு பிறகு நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்தன. இப்படிப்பட்ட நிலைமையில் செல்லா அய்யாவு இயக்கத்தில் கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்தார். இதிலும் ஐஸ்வர்யா லட்சுமிதான் ஹீரோயின். மேலும் முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து ரம்யா கிருஷ்ணன், மோக்‌ஷா, ஸாரா என்ற குழந்தை நட்சத்திரம் ஆகியோரும் புதிதாக இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைக்க; விஷ்ணு விஷாலே தயாரித்திருக்கிறார்.

Also Read
Gatta kusthi 2 Prashanth Review - கட்டா குஸ்தி பிரசாந்த் விமர்சனம்.. கண்டிப்பாக ப்ளாக் பஸ்டராம்
Gatta kusthi 2 Prashanth Review - கட்டா குஸ்தி பிரசாந்த் விமர்சனம்.. கண்டிப்பாக ப்ளாக் பஸ்டராம்

நேற்று ரிலீஸான படம்: ரிலீஸுக்கு முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்ட காட்சியில் படத்துக்கு சூப்பர் ஆதரவு கிடைத்தது. பலரும் ஐஸ்வர்யா, விஷ்ணு, இயக்குநர் செல்லா ஆகியோரை பாராட்டி தள்ளினார்கள். நிச்சயம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறி இது பக்கா ஹிட்டடிக்கும் என்று ஆரூடமும் கூறினார்கள். அப்படி எக்கச்சக்க பாசிட்டிவ் எனர்ஜியோடு நேற்று திரையரங்குகளில் ரசிகர்கள் பார்ப்பதற்காக படமானது ரிலீஸானது. மக்களும் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றார்கள்.

மக்களிடம் ரெஸ்பான்ஸ் எப்படி?: பத்திரிகையாளர்களிடம் பெற்ற நல்ல வரவேற்பை போன்றே இங்கேயும் பெற்றது படம். குறிப்பாக பெண்களிடம் படம் அமோக ஆதரவை பெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது மாறிவிட்டதால்; அனைத்து சென்ட்டர் ரசிகர்கள், ரசிகைகளையும் இந்தப் படம் கவரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்நிலையில் முதல் நாளான நேற்று கட்டா குஸ்தி 2 செய்த வசூல் குறித்த தகவல்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

வசூல் எப்படி?: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் நேற்று படம் சக்கை போடுதான் போட்டிருக்கிறது. அந்த இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி, மொத்தம் 2,100 ஷோக்கள் திரையிடப்பட்டு இரண்டு கோடியே 55 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம். முதல் நாளே படம் இரண்டரை கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. நேற்றிலிருந்து படத்துக்கு பாசிட்டிவ் டாக்ஸ் அதிகம் வர தொடங்கியிருப்பதாலும்; இன்றும் நாளையும் விடுமுறை என்பதாலும் குடும்ப ரசிகர்களின் வருகையால் இனிவரும் நாட்களில் வசூலை கட்டா குஸ்தி 2 அதிகரித்து பாக்ஸ் ஆஃபிஸை தன் கன்ட்ரோலில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X