சமந்தாவுக்கு எப்போது பிரசவம் தெரியுமா?.. எல்லாம் கூடி வருதே.. மேடம் செம மகிழ்ச்சியாம்
சென்னை: நாக சைதன்யாவை திருமணம் செய்துவிட்டு சில வருடங்களிலேயே பிரிந்த சமந்தா; அடுத்ததாக இயக்குநர் ராஜ் நெடிமோருவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ராஜுக்கும் அது இரண்டாவது திருமணம் ஆகும். சூழல் இப்படி இருக்க சமந்தா கர்ப்பமாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில் அவரது பிரசவ மாதம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் ஒரு ஆச்சரியமான விஷயமும் அடங்கியிருக்கிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தா முதலில் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமண வாழ்க்கை சில வருடங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. ஆனால் அதற்கு பிறகு தொடர்ந்து சிக்கல்களும், பிரச்னைகளும் அந்த உறவில் எழுந்துகொண்டே இருந்தன. அதற்கு சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பதுதான் காரணம் என்று சொல்லப்பட்டது. அதன் காரணமாகத்தான் இரண்டு பேரும் பிரிந்துவிட்டார்கள் என்றும் ஒரு பேச்சு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வந்த சமந்தா: நாக சைதன்யாவுடனான பிரிவு அரங்கேறிய கையோடு; சம்முவுக்கு மையோசிடிஸ் நோய் பாதிப்பும் ஏற்பட்டுவிட்டது. அதனால் வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற்ற மெல்ல மெல்ல மீண்ட அவர்; மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த குஷி, சாகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் தோல்வியடைந்தன. சிட்டாடல் வெப் சீரிஸ் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதனை ராஜ் & டிகே இயக்கியிருந்தார்கள். அந்த சமயத்தில் இயக்குநர் ராஜுடன் காதலிலும் விழுந்தார் சமந்தா.
திருமணம் செய்துகொண்ட ஜோடி: ராஜும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காதலித்தவந்த அவர்கள் கடந்த வருடத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே சென்றிருந்தார்கள். இப்போது ராஜும், சமந்தாவும் சூப்பர் ஜோடியாக தங்கள் திருமண வாழ்க்கையில் ஜொலித்துவருகிறார்கள்.
கர்ப்பமாக இருக்கும் சமந்தா?: மணமுடித்த பிறகு மா இன்ட்டி பங்காரம் திரைப்படத்தில் நடித்தார். சில நாட்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் சக்கைப்போடு போட்டுவருகிறது. இதனால் சமந்தா பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். அந்த வெற்றியை கொண்டாடியபோது டி ஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்தார் சாம். அப்போது அவருடைய வயிறு இயல்பைவிடவும் பெரிதாக இருந்தது. இதனால் அவர் கர்ப்பமாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.
எப்போது பிரசவம்?: தான் கர்ப்பமாக இருப்பதை இன்னும் சில நாட்களில் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவரது பிரசவம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்தில் சமந்தாவுக்கு பிரசவம் நடக்கும் என்று அந்தக் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே சமந்தா - ராஜ் திருமணம் நடந்ததும் டிசம்பர் மாதத்தில்தான். இப்போது குழந்தையும் அதே மாதத்தில் பிறக்கவிருப்பதால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அந்த ஜோடி இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications
