சத்யராஜோடு ஜாலி சைக்கிள் ரெய்டு சென்ற பிரியாமணி.. அட சூப்பரா இருக்கே பாஸ்

சென்னை: நடிகை பிரியாமணி கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். தேசிய விருது வென்ற நடிகையான அவர் திருமணத்துக்கு பின்பு சில காலம் நடிக்காமல் இருந்தார். அதனையடுத்து தொடர்ந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் ஜனநாயகன் திரைப்படமும் வரவிருக்கிறது. இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியாமணி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த அந்தப் படம் தோல்வி அடைந்தாலும் பிரியாமணிக்கு நல்ல அறிமுகமும், பெயரும் கிடைத்தன. அதனையடுத்து பாலுமகேந்திரா இயக்கத்தில் அது ஒரு கனா காலம் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். சினிமாவுக்குள் வந்த சில காலத்திலேயே இரண்டு பெரிய இயக்குநர்களின் இயக்கத்தில் அவர் நடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Sathyaraj and Priyamani s Fun Cycle Rickshaw Ride Video Goes Viral Ahead of Jana Nayagan Release
Photo Credit:

பருத்திவீரனுக்காக தேசிய விருது: அதனையடுத்து அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். ஒவ்வொரு சீனிலும் பிரியாமணியின் நடிப்பு ரசிகர்களை அசர வைத்துக்கொண்டே சென்றது. குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்தார். இதன் காரணமாக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

Also Read
பாக்யராஜுக்கு காதலியாக நடித்த ஆர்த்தி ரவியின் அம்மா.. என்ன படம் தெரியுமா?.. கஸ்தூரி ஓபன் டாக்
பாக்யராஜுக்கு காதலியாக நடித்த ஆர்த்தி ரவியின் அம்மா.. என்ன படம் தெரியுமா?.. கஸ்தூரி ஓபன் டாக்

பிரியாமணிக்குறைந்த வாய்ப்புகள்: பருத்திவீரனில் தேசிய விருது கிடைத்ததால் கண்டிப்பாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அதற்கு நேர் மாறாக ஒன்றிரண்டு படங்களின் வாய்ப்பே அமைந்தது. அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்களும் சரியாக போகவில்லை. ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போக முஸ்தஃபா என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

மீண்டும் நடிக்க வந்த பிரியாமணி: இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் சில திமிர் பிடித்த இந்துக்கள் அவரை சகட்டுமேனிக்கு விளாசினார்கள். அதற்கு அவரும் பதிலடி கொடுத்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்துவரும் அவர் ஜவான், மைடான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவை அனைத்திலும் முக்கியமான ரோலே அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதனை அவரும் சிறப்பாகவே கையாண்டிருந்தார்.

ட்ரெண்டாகும் வீடியோ: தமிழை பொறுத்தவரை விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்துக்குள் படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் பிரியாமணி தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது மூன்று சக்கர சைக்கிள் ரிக்‌ஷாவில் சீனியர் நடிகர் சத்யராஜுடன் ஜாலியாக பிரியாமணி ரைடு சென்ற வீடியோதான் அது. இரண்டு பேரும் அவ்வளவு மகிழ்ச்சியோடு அதில் பயணம் செய்தார்கள். அந்த வீடியோதான் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X