ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் KHXRK.. நெல்சன் என்ன பண்ணப்போறாரு?.. ஸ்ருதிஹாசன் ஓபன்

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் படத்துக்கு இப்போது KHXRK என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் வைத்த எதிர்பார்ப்புகளை எல்லாம் அடித்துவிட்டது. ரொம்பவே சுமாராக வந்திருந்தது அந்த க்ளிம்ப்ஸ். இருப்பினும் முழு திரைப்படத்தில் நெல்சன் கலக்கிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்திய திரைத்துறையே எதிர்பார்த்திருக்கும் படமாக மாறியிருக்கிறது KHXRK திரைப்படம். இரண்டு ஜாம்பவான்களான ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு பின்பு இணைந்து நடிக்கிறார்கள். அநேகமாக இதுதான் அவர்கள் இரண்டு பேருக்கும் கடைசி படமாகக்கூட இருக்கலாம் என்றும் பலரால் கருதப்படுகிறது. இதனால்தான் இப்படம் பெரிய ஹைப்பை பெற்றிருக்கிறது. கண்டிப்பாக 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் முதல் படமாக இருக்கும் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Shruthi Haasan has spoken about the film KHXRK which brings together Rajinikanth and Kamal Haasan
Photo Credit:

நெல்சன் இயக்குநர்: ரஜினியும், கமலும் சேரப்போகிறார்கள் என்ற தகவல் கசிந்ததுமே; யார் இயக்குநர் என்பதில்தான் பலரது கவனமும் இருந்தது. முதலில் லோகேஷ் கனகராஜிடம்தான் கதை கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் வழக்கம்போல் முழு நீள வயலன்ஸ் கதையை சொல்லியிருக்கிறார். இவர்களோ, லைட்டான கதையோடு ஒரு படத்தை செய்ய வேண்டும் என்ற முடிவில் இருந்ததால் அவரை ரிஜெக்ட் செய்துவிட்டு நெல்சன் திலீப்குமாரை டிக் அடித்தார்கள். ஏற்கனவே ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தையும், கமலை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இயக்கியிருக்கிறார் அவர்.

Also Read
Nooru Saami Review - அந்த சீன்ல தாங்க முடியாத அழுகை.. பிரபலம் ஓபன்.. நூறு சாமி விமர்சனம் செம பாசிட்டிவ்
Nooru Saami Review - அந்த சீன்ல தாங்க முடியாத அழுகை.. பிரபலம் ஓபன்.. நூறு சாமி விமர்சனம் செம பாசிட்டிவ்

நெல்சனுக்கு எப்படி வாய்ப்பு?: அடிப்படையில் நெல்சனுக்குள் அதீதமான ஹியூமர் இருக்கிறது. அவரது படங்களில் அது நன்றாக ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கின்றன. பீஸ்ட் மட்டும்தான் சொதப்பிவிட்டது. அதேசமயம் அவர் தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த இயக்குநர்தான். அந்த நம்பிக்கையிலும், ஏற்கனவே இரண்டு பேரின் குட் புக்கிலும் நெல்சன் இருப்பதாலும் இந்த வாய்ப்பு அவருக்கு சென்றிருக்கிறது. அவரும் இதனை சரியாக பயன்படுத்திட வேண்டும் என்று முனைப்போடு உழைத்துவருகிறார்.

க்ளிம்ப்ஸ் வீடியோ: நெல்சனும் இயக்குநராக கமிட்டான பிறகு இரண்டு பேரையும் வைத்து ஒரு க்ளிம்ப்ஸ் வீடியோவை ஷூட் செய்தார். அது சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்புக்கு ஈடாக அந்த க்ளிம்ப்ஸ் வீடியோவுக்கும் இருந்தது. ஆனால் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் சலித்துக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. ரஜினியையும், கமலையும் பார்க்கையில் ரியலாகவே இல்லை. ஏதோ ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தியது போல் இருப்பதாக ஓபனாகவே விமர்சித்தார்கள்.

ஸ்ருதிஹாசன் பேச்சு: இருப்பினும் படத்தில் அத்தனை குறைகளையும் சரி செய்துவிட்டு நெல்சன் திலீப்குமார் தரமாக கொடுப்பார் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகையும், கமலின் மகளுமான ஸ்ருதிஹாசனிடம் இந்தப் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரண்டு பேருமே செம ஹேண்ட்சமான ஆட்கள். நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்பது க்ளியராக சொல்லிக்கொள்கிறேன்.

நெல்சன் என்ன செய்யப்போகிறார்?: இந்தப் படத்தில் நெல்சன் திலீப்குமார் என்ன செய்யப்போகிறார் என்பதை பார்க்க ஆவலோடு இருக்கிறேன்.கூலி திரைப்படத்தில் பணியாற்றிய பிறகு ரஜினியின் பெர்சனாலிட்டிக்காகவே அவரது ரசிகையாக மாறிவிட்டேன். இவங்க இரண்டு பேரையும் மீண்டும் ஸ்க்ரீனில் சேர்த்து வைத்து பார்க்க அனைவர் மாதிரியே நானும் காத்திருக்கிறேன். இது பிரமாண்டமாக இருக்கும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X