Nooru Saami Review - அந்த சீன்ல தாங்க முடியாத அழுகை.. பிரபலம் ஓபன்.. நூறு சாமி விமர்சனம் செம பாசிட்டிவ்

சென்னை: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் நூறு சாமி. நாளை இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே அவர்கள் இணைந்த பிச்சைக்காரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருந்தது. எனவே இந்தப் படத்தின் மீதும் அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் இதுவரை படம் பார்த்த பிரபலங்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகிறார்கள்.

கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சசி. அவர் இயக்கிய முதல் படமான சொல்லாமலே மெகா ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ, 555, சிகப்பு மஞ்சள் பச்சை, பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் கோலிவுட்டின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக அமைந்தன. சசியின் படங்கள் என்றாலே வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய ரெஸ்பான்ஸை பெறும் என்ற நிலைதான் நீடிக்கிறது.

Nooru Saami Review - Sudha Kongara Praises Movie And Vijay Antony and Swasika s Powerful Performances
Photo Credit:

விஜய் ஆண்டனியுடன்: முக்கியமாக விஜய் ஆண்டனியை வைத்து அவர் இயக்கிய பிச்சைக்காரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனத். தாய் பாசத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டிருந்த அந்தப் படம் விஜய்க்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த படங்களிலேயே பிச்சைக்காரன் படம்தான் அவருக்கு வசூல் ரீதியாக நிம்மதியாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Also Read
Nooru Sami First Review - நூறு சாமி முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்காம் தெரியுமா?
Nooru Sami First Review - நூறு சாமி முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்காம் தெரியுமா?

நூறு சாமி: பிச்சைக்காரன் திரைப்படத்துக்கு பிறகு மீண்டும் விஜய் ஆண்டனியை வைத்து படம் இயக்கியிருக்கிறார் சசி. படத்துக்கு நூறு சாமி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் லப்பர் பந்து பட புகழ் சுவாசிகா முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். விஜய் ஆண்டனியே தயாரிக்கவும் செய்திருக்கிறார். இந்தக் கூட்டணி வெற்றி கூட்டணி என்பதால் இந்தப் படத்திலும் அது மீண்டும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை திரைத்துறையில் எழுந்திருக்கிறது.

பிரபலங்கள் பாராட்டு: படமானது நாளை திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. திரைத்துறை பிரபலங்களுக்கு கடந்த சில நாட்களாக படத்தை திரையிட்டு காண்பித்துவருகிறார் சசி. இயக்குநர் ஹெச்.வினோத் இந்தப் படத்தை பார்த்துவிட்டு,'தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இது இருக்கும்' என புகழ்ந்திருந்தார். அதேபோல், இன்னும் பிற பிரபலங்களும் படத்தை வெகுவாக பாராட்டிவிட்டு; கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்றும் இப்போதே ஆரூடம் கூறிவருகிறார்கள்.

சுதா கொங்கரா விமர்சனம்: இந்நிலையில் நூறு சாமி திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் சுதா கொங்கரா தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அவர் சசியிடம் படம் பற்றி பேசுகையில், "ஒரு சீனில் தாங்க முடியாத அழுகை வந்துவிட்டது. சுவாசிகா அபாரமாக நடித்திருக்கிறார். நீங்கள் அபாரமான இயக்குநர். ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்காகவும் இருந்தது. ஒரு மெயின் ஸ்ட்ரீம் ஃபிலிமாகவும் எனக்கு பிடித்திருந்தது. விஜய் ஆண்டனியும் சூப்பராக நடித்திருக்கிறார். இதற்கு முன்பு அவர் இப்படி நடித்து பார்த்ததில்லை" என்றார். தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்திருப்பதால் படத்தை பார்க்க ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X