அந்த ஆன்ட்டி ஃபன் இல்லை அப்பா.. ரீல்ஸ்லாம் க்ரிஞ்ச்.. கமலுக்கு மகள் ஸ்ருதிஹாசன் கொடுக்கும் பல்பு
சென்னை: கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அடுத்ததாக கோலிவுட்டில் அவரது நடிப்பில் ட்ரெய்ன் திரைப்படம் வரவிருக்கிறது. அதனை மிஷ்கின் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தந்தை கமல்ஹாசன் குறித்து ஸ்ருதிஹாசன் பேசியிருக்கும் விஷயம் கலகலப்பை உண்டு செய்திருக்கிறது.
உலகநாயகன் கமல்ஹாசனின் மகள்களில் ஒருவர் ஸ்ருதிஹாசன். இசை மீது ஆர்வம் உடைய அவர்; ஆல்பம் பாடல்களை செய்வதில் பிஸியாக இருந்தார். பிறகு உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அவர்; ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஹீரோயினாக மாறிவிட்டார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததோடு மட்டுமின்றி; ஸ்ருதியின் அழகுக்கும், நடிப்புக்கும் ரசிகர்களையும் உருவாக்க தொடங்கியது. அதிலிருந்து நடிப்பையும் பிரதானமாக எடுத்துக்கொள்ள தொடங்கிவிட்டார்.

பிஸி நடிகை: ஏழாம் அறிவுக்கு பிறகு தமிழில் அவர் நடித்த 3, பூஜை, புலி, வேதாளம் உள்ளிட்ட படங்களில் வெற்றியையும், தோல்வியையும் மாறி மாறி பார்த்தார். இது ஒருபக்கம் இருக்க தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் கமிட்டாகி ஒரு பான் இந்தியா ஹீரோயினாக இப்போது ஜொலித்துவருகிறார். தந்தை அளவுக்கு இல்லையென்றாலும்; நடிப்பில் தன் பங்குக்கு பின்னி பெடலெடுக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழில் ட்ரெய்ன்: இப்போது தமிழில் அவர் ட்ரெய்ன் படத்தில் நடித்திருக்கிறார். மிக விரைவில் அந்தப் படம் வரவிருக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கிறார்.முதன்முறையாக மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்திருப்பதால்; இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார் ஸ்ருதி. ரசிகர்களிடையேயும் படத்துக்கு சூப்பரான ஹைப் இருக்கிறது. இதுதவிர்த்து தெலுங்கில், Aakasamlo Oka Tara என்ற படத்திலும் நடித்துவருகிறார்.
ரிலேஷன்ஷிப் விவரங்கள்: கமல் எப்போதுமே பல ரிலேஷன்ஷிப்களில் இருந்தவர். அதனை பொதுவெளிக்கு அவர் மறைத்ததும் இல்லை. அதேபோல்தான் ஸ்ருதிஹாசனும். முதலில் சில நடிகர்களுடன் அவருக்கு காதல் என்ற கிசுகிசுக்கள் கிளம்பியயது. அதனையடுத்து சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்தார். இரண்டு பேரும் சேர்ந்து கமல்ஹாசனையும் சந்தித்தார்கள். விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரேக்கப் செய்துவிட்டு பிரிந்துவிட்டார்கள்.
ட்ரெண்டாகும் பேட்டி: இப்போது சிங்கிளாக இருக்கும் ஸ்ருதி; சமீபத்தில் அளித்த பேட்டியில் தன் தந்தை குறித்து பேசியிருக்கிறார். அவர் அந்தப் பேட்டியில், "எனக்கு என்னுடைய அப்பா இன்ஸ்டாகிராமில் நிறைய ரீல்ஸ்களை அனுப்புவார். அவற்றில் சில ரொம்பவே கிரிஞ்சாக இருக்கும். அப்போதுந் ஆன், 'அப்பா இந்த ஆன்ட்டி அவ்வளவு ஃபன்னி இல்லை' என சொல்லிவிடுவேன். அதேசமயம் அதிகம் கலைநயமிக்க விஷயங்களையும் அனுப்புவார். சிறுமி பாடும் வீடியோவை அனுப்புவார். அது என்னை நினைத்துதான் அனுப்புகிறார் என்பது புரியும். அதேபோல் கிராமங்களில் மக்கள் சமைக்கும் வீடியோக்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கலை தொடர்பான ரீல்ஸ்களை அவர் அடிக்கடி பார்ப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications
