ஐட்டம் சாங் என சொல்லாதீர்கள்.. எவ்வளவு உழைப்பு தெரியுமா?.. வேதனையில் தமன்னா

சென்னை: கோலிவுட்டில் மிகப்பெரிய ரவுண்டு வந்துகொண்டிருந்த தமன்னாவுக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்தன. அதனையடுத்து பாலிவுட்டுக்கு சென்றார் அவர். அங்கே பல ரோல்களை செய்த அவர்; மீண்டும் தமிழில் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இப்போது புருஷன் படத்தில் நடித்துவரும் அவர்; ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு நடனமும் ஆடியிருந்தார்.

நடிகை தமன்னா முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல ஹிட் படங்களில் நடித்து தமிழில் பிஸியாக இருந்தார். ரசிகர்களால் மில்க் பியூட்டி எனவும் கொண்டாடப்பட்டார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அவரது ஆட்சிதான் தமிழில் நடந்தது என்றே சொல்லலாம். பல ஹீரோக்கள் அவருடன் நடித்துவிட ஆசைப்பட்டதாகவும் அப்போதைக்கு நிறைய கிசுகிசுக்கள் எல்லாம் வந்தன. குறிப்பாக தமன்னாவை ஹீரோயினாக கமிட் செய்யவில்லை என்றுதான் கோ படத்தில் சிம்பு நடிக்கவில்லை என்றும் அப்போதைக்கு பேச்சுக்கள் எழுந்தன.

Tamannaah Bhatia Rejects Item Song Label - It s Not A Respectful Term For Women
Photo Credit:

பாலிவுட்டில் தமன்னா: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவருக்கு தென்னிந்திய சினிமாக்களில் திடீரென வாய்ப்புகள் குறைந்தன. அதற்கு ஒரு நடிகரின் குடும்பமும், தந்தையும்தான் காரணம் எனவும் சொல்லப்பட்டது. இங்கே வாய்ப்புகள் குறைந்த பிறகு பாலிவுட்டுக்கு சென்ற அவர்; உச்சக்கட்ட கவர்ச்சியையும் காண்பிக்க தொடங்கினார். அதற்காக கோடி கணக்கில் சம்பளமாகவும் பெறுகிறார் என்ற பேச்சும் உண்டு.

Also Read
இவ்வளவு அழகாக இருக்கீங்களே சிம்பு.. அப்படி மட்டும் செய்யுங்க.. எஸ்டிஆருக்கு அட்வைஸ் செய்த விஜய்
இவ்வளவு அழகாக இருக்கீங்களே சிம்பு.. அப்படி மட்டும் செய்யுங்க.. எஸ்டிஆருக்கு அட்வைஸ் செய்த விஜய்

ஜெயிலர் காவாலா: அதே ஃபார்முலாவைத்தான் தமிழில் ஜெயிலர் படத்திலும் செய்தார். நீண்ட வருடங்களுக்கு தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த அவர்; காவாலா படத்துக்கு போட்ட நடனத்தை பார்த்து அசந்துபோயினர். அதேசமயம் அந்த நடன அசைவுகள் அவ்வளவு ஆபாசமாக இருந்தது என்றும் ஒரு விமர்சனம் அப்போது எழுந்தது. ஜெயிலருக்கு பிறகு சில படங்களில் நடித்த அவர்; இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக புருஷன் படத்தில் நடித்துவருகிறார்.

காதல் டூ பிரேக் அப்: இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸில் நடித்தபோது நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த சூழலில் அவர்களது உறவு பாதியில் முறிந்தது. விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அந்த காதல் பிரேக் அப் ஆனதால் பலரும் அதிர்ச்சியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமன்னா பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஐட்டம் சாங் என்று விளிப்பதை சுட்டிக்காட்டி பேசிய அவர், "ஐட்டம் பாடல் என்று சொல்வதை நான் விரும்பவில்லை. அந்தச் சொல் பெண்களுக்கான மரியாதைக்குரிய சொல் இல்லை. ஒரு பாடலுக்கு நாங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அதை ஐட்டம் என்று அழைப்பது அந்தப் பெண்ணின் உழைப்புக்கு கொடுக்கும் மரியாதை இல்லை" என்றிருக்கிறார்.

Read more about: tamannaah தமன்னா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X