குஷ்பு மகள் திருமணத்தில் திரிஷா.. சஸ்பென்ஸ் ஓவர்.. விஜய் வந்தாரா இல்லையா?

சென்னை: நடிகை குஷ்புவுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் மூத்தவரான அவந்திகாவுக்கு ஷ்ரவன் என்பவருடன் திருமணம் உறுதியானது. அதனையடுத்து கோவாவில் வைத்து நேற்று காலை பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. விரைவில் ரிசப்ஷனும் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் திருமணத்தில் நடிகை திரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்ட குஷ்புவுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். மூத்தவரான அவந்திகாவும் தாய் மாதிரியே சினிமாவில் ஹீரோயினாக இருக்கிறார். மலையாளத்தில் ஆரம்பம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்ததாக தமிழில் அட்டாக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். தன்னுடைய தாய் எப்படி கொடி கட்டி பறந்தாரோ அதேபோல் தானும் இருக்க வேண்டும் என்ற முனைப்பில் உழைத்துவருகிறார் அவர்.

Trisha Attends Khushbu s Daughter Avantika s Goa Wedding Alone Vijay Fans React
Photo Credit:

இரண்டாவது மகளும் சினிமாவில்தான்: முதல் மகள் அவந்திகா ஹீரோயினாக இருக்க; இரண்டாவது மகள் அனந்திதாவோ க்ரியேட்டிவ் ப்ரொடியூசராக கலக்கிவருகிறார். அவர் பணியாற்றிய டபுள் ஆக்குபன்ஸி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஓரளவுக்கு சுமார் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read
பர்த்டே கேக் புதுசா? பழசான்னு? நோண்டாதீங்க.. குஷ்பு மகள் திருமணத்தில் இருக்கு தளபதி கச்சேரி!
பர்த்டே கேக் புதுசா? பழசான்னு? நோண்டாதீங்க.. குஷ்பு மகள் திருமணத்தில் இருக்கு தளபதி கச்சேரி!

மூத்த மகள் திருமணம்: இதற்கிடையே மூத்தவரான அவந்திகா; ஷ்ரவன் என்பவரை காதலித்தார். இந்தக் காதலுக்கு வீட்டில் உடனடியாக சம்மதம் கிடைத்தது. அதனையடுத்து பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் ம்ற்றும் திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கினார்கள் குஷ்புவும், சுந்தர்.சியும். திருமணமானது கோவாவில் பிரமாண்டமாக திட்டமிடப்பட்டிருந்தது.

கோவாவில் நடந்த திருமணம்: திட்டமிட்டபடி நேற்று காலை அவந்திகா - ஷ்ரவன் சீனிவாசன் திருமணம் கோவாவில் இருக்கும் ரெசார்ட் ஒன்றில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் ராதிகா சரத்குமார், நாகார்ஜுனா, சுகாசினி, பூர்ணிமா பாக்யராஜ், சுஜாதா விஜயகுமார், பிருந்தா மாஸ்டர் என பலர் கலந்துகொண்டார்கள். இத்திருமணத்தில் அனைவரது கவனமும் திரிஷா மீதுதான் இருந்தது.

தனியாக வந்த திரிஷா: ஏனெனில் ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு இப்போதைய முதலமைச்சர் விஜய்யுடன் மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு கலந்துகொண்டார். அது பெரிய அளவில் விவாதத்தையும், பிரச்னையையும் கிளப்பியது. அதுமாதிரி இந்தத் திருமணத்திலும் செய்துவிடுவாரோ என்று விஜய் ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தார்கள். ஆனால் திரிஷா தனியாக வந்தே இந்த விழாவில் கலந்துகொண்டார். அது பலருக்கும் நிம்மதியை வரவழைத்திருக்கிறது.

ரிசப்ஷனுக்கு வருவாரா விஜய்?: திருமணத்துக்கு விஜய்யும் திரிஷாவும் சேர்ந்து வராதது தளபதி ரசிகர்களுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்தாலும் முழுவதுமாக கலக்கம் தீரவில்லை. ஏனெனில் இனிமேல்தான் ரிசப்ஷன் சென்னையில் நடக்கவிருக்கிறது. அந்த வரவேற்புக்கு திரிஷாவும், விஜய்யும் சேர்ந்து வந்துவிடுவார்களோ என்ற அச்சத்திலும் அவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு பேரும் சேர்ந்து மட்டும் வந்துவிடாதீர்கள்; ஏற்கனவே இந்த விஷயத்தில் எங்களால் சமாளிக்க முடியவில்லை என்று ஓபனாகவே கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

குஷ்பு சொன்னது: முன்னதாக விஜய்க்கு பத்திரிகை வைத்தது குறித்து குஷ்பு வெளியிட்டிருந்த பதிவில், "எங்கள் குடும்பத்துக்கு சிறப்பான மற்றும் மறக்க முடியாத தருணம். எனது அன்பு சகோதரரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய்யை அவரது வீட்டில் சந்தித்தோம். எங்கள் மகள் திருமண அழைப்பிதழை வழங்கினோம். அவரை பார்க்கும்போதெல்லாம் எப்போதும் நம்முடைய இதயம் சந்தோஷத்தால் நிரம்புகிறது.என் மகள்கள் ரொம்பவே உறசாகமாக இருந்தார்கள். அவரின் மீதான அவர்களது பார்வை அகலவே இல்லை. பிஸியான நேரத்திலும் எப்போதும்போல் அன்பு, புன்னகை காட்டி வரவேற்றார். என் அன்பு சகோதரரே, 'உங்கள் விலை மதிப்பில்லாத நேரம், அன்பு, ஆசீர்வாதங்களுக்கு நன்றி. வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X