திரிஷா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?.. அட இது லிஸ்ட்லையே இல்லையே
சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டில் கடந்த பல வருடங்களாக டாப் நடிகையாக ஜொலித்துவருகிறார். சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அடுத்ததாக விஸ்வம்பரா திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடையே இருந்தது.
திரிஷா சினிமாவில் அறிமுகமாகி 24 வருடங்கள் ஆகின்றன. இத்தனை வருடங்களாகியும் இளமையோடும், திறமையோடும் கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக ஜொலித்துவருகிறார். எத்தனையோ இளம் ஹீரோயின்கள் வந்துவிட்டார்கள்தான். இருப்பினும் திரிஷாவுக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.கடந்த வருடத்தில் மட்டும் மூன்று படங்களில் நடித்தார். அத்தனையும் பெரிய ஹீரோக்கள் படங்கள்.

கருப்பு திரிஷா: இந்த வருடத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு திரைப்படத்தில் நடித்தார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டராகி மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. படம் முழுக்க திரிஷா அவ்வளவு அழகோடு இருந்தார். சில இடங்களில் அவரது எக்ஸ்பிரஷன்களும், நடிப்பும் பலரையும் ஈர்த்தது. அடுத்ததாக விஸ்வம்பரா திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
லைம் லைட்டில் திரிஷா: அவரது கரியர் இப்படி படு பிஸியாக ஒருபக்கம் சென்றுகொண்டிருக்கிறது. அதேசமயம் இன்னொரு பக்கமோ அவரது பெயர் சர்ச்சைகளிலும் சிக்கிவருகிறது. முக்கியமாக விஜய் - சங்கீதா விவாகரத்து பிரச்னைக்கு காரணமே திரிஷாதான் என்று பேச்சுக்கள் எழுந்த சூழலில்; விஜய்யுடன் திருமணத்துக்கு வந்தது, பதவியேற்பு விழாவுக்கு வந்தது, அஜித் தாய் இறப்புக்கும் விஜய்யுடன் சென்றது என தொடர்ந்து அவர் செய்யும் செயல்கள் அந்த பேச்சுக்கு வலு சேர்க்கும்படி இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
கூல் திரிஷா: அவரை பற்றி ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஏதோ ஒன்றை பேசிக்கொண்டிருந்தாலும்; அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் செம கூலாக தன்னுடைய வாழ்விலும், கரியரிலும் கவனத்தை செலுத்திவருகிறார். அதை பார்த்து அத்தனை பேரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். சூழல் இப்படி இருக்க இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் பெரும்பாலானோரிடம் இருந்தது. ஒருவேளை அரசியலுக்கு வருவது பற்றிய அறிவிப்பாக இருக்குமோ என்றெல்லாம் சிலர் கொளுத்தி போட்டார்கள்.
திரிஷா அறிவிப்பு: இந்நிலையில் திரிஷா ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், "ஹலோ சென்னை. என்னுடைய க்ளோஸ் ஃப்ரெண்டோட ஒரு கனவு இன்று ஒரு டீமாக மாறியிருக்கிறது. அவரது டீம் பெயரை நான் வெளியிடுவதில் மகிழ்ச்சி. 'சென்னை தமிழ் டைட்டன்ஸ்'. நம்ம டீம் தமிழ்நாடு பிக்கிள் பால் ப்ரீமியர் லீக் சீசன் 2ல் கலந்துகொள்கிறது. என்னுடைய தோழி வரலட்சுமிக்கும் மொத்த டைட்டன்ஸ் டீமுக்கும் என் மனதார வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
