ஏங்க முறுக்கு மீசை இறங்கிடுச்சு.. உடனே கணவர் விஜய் தேவரகொண்டாவுக்கு ராஷ்மிகா செய்ததை பாருங்க

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் ஆனவுடனேயே தனது சொந்த ஊருக்கு மனைவியுடன் சென்ற விஜய்; 44 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனது அறக்கட்டளை மூலமாக உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அறிவித்தபடி அதை இன்று வழங்கவும் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கன்னட திரையுலகத்தில் அறிமுகமாகி தெலுங்கு திரையுலகத்தில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. ஏற்கனவே நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்ற நேஷனல் க்ரஷ்; சில காரணங்களால் திருமணம் வரை செல்லவில்லை. அந்த உறவை முறித்துக்கொண்டு சினிமாக்களில் கவனம் செலுத்திய அவர்; கீதா கோவிந்தம் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார்.அப்போது ஏற்பட்ட பழக்கம் நாட்கள் செல்ல செல்ல காதலாக மாறிய்து.

Viral Video Rashmika Mandanna Fixes Vijay Deverakonda s Mustache During Public Event
Photo Credit:

வீட்டு சம்மதத்துடன்: இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டு சம்மதம் கிடைத்தை அடுத்து; ஹைதராபாத்தில் சிம்ப்பிளாக நிச்சயதார்த்தத்தை செய்துகொண்டு; ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து கடந்த பிப்ரவரி மாதம் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார்கள். அதனையடுத்து ஹைதராபாத்தில் ரிசப்ஷனும் நடந்தது. அதில் ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையிலிருந்தும் பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

Also Read
பாரதிராஜா இறுதி சடங்கு.. மனோஜ் மனைவியை துரத்திய மகள் ஜனனி?.. சொத்து பிரச்னையா?.. பிரபலம் ஓபன்
பாரதிராஜா இறுதி சடங்கு.. மனோஜ் மனைவியை துரத்திய மகள் ஜனனி?.. சொத்து பிரச்னையா?.. பிரபலம் ஓபன்

விஜய் தேவரகொண்டாவின் சூப்பர் செயல்: திருமணம் தொடர்பான அத்தனை விஷயங்களையும் முடித்துக்கொண்டு தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் இருக்கும் தும்மன்பேட்டுக்கு இந்த ஜோடி சென்றது. அப்போது, '44 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர், மாணவிகளுக்கு தன்னுடைய அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்' என அறிவித்திருந்தார். அது பலரிடமும் பாராட்டை பெற்றது.

இன்று சென்ற தேவரகொண்டா: அறிவித்தபடி இன்று அங்கே சென்று கல்வி உதவித்தொகையை வழங்கினார். இதுகுறித்து ஆவர் வெளியிட்டிருந்த பதிவில், "நாங்கள் இப்போது தும்மன்பேட் நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கிறோம். அது எனது தந்தை பிறந்த சிறிய கிராமம். பிப்ரவரி மாதத்தில் நானும், ராஷ்மிகாவும் எங்கள் சிறிய கனவின் தொடக்கத்தை அறிவித்தோம். தெலங்கானாவின் அச்சம்பேட் மண்டலத்தில் இருக்கும் 9 மற்றும் பத்தாம் வகுப்பில் கடினமாக உழைக்கும் மாணவர்களை பாராட்டி ஊக்குவிக்க அந்த முயற்சியை தொடங்கினோம். தங்கள் பெற்றோர்களை பெருமைப்பட வைத்த 180 மாணவர்களின் பட்டியல் இதோ" என கூறி மாணவ, மாணவிகளின் பட்டியலை வெளியிட்டிருந்தார்.

ராஷ்மிகா மந்தனா செய்தது: இந்நிலையில் அந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, தேவரகொண்டாவின் தந்தை ஆகியோர் மாணவ,மாணவிகளுக்கு உதவித்தொகையை வழங்கினார்கள். அப்போது முறுக்கியிருந்த விஜய்யின் மீசை கீழே இறங்கிவிட்டது. அதை பார்த்த ராஷ்மிகா உடனே தனது கணவரின் மீசையை மீண்டும் முறுக்கிவிட்டார். அதேபோல், அவரது முகத்தையும் துடைத்துவிட்டார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், கணவர் மீது இப்படி கண்ணும் கருத்துமாக ராஷ்மிகா இருப்பதை பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது என கமெண்ட்ஸ் செய்து அந்த வீடியோவை ட்ரெண்டாக்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X