முதல் காதலை பற்றி அப்படி சொல்ல காரணம்?.. ஓபனாக போட்டுடைத்த வனிதா விஜயகுமார்

சென்னை: வனிதா விஜயகுமார் நடிகை, இயக்குநர் என்ற முகங்களை கொண்டவர். சில திருமணங்களை செய்து; எதுவுமே செட் ஆகாததால் அதிலிருந்து வெளியே வந்த இவர் இப்போது சிங்கிளாக இருக்கிறார். சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு அவர் கொடுத்த பேட்டியில், 'என்னுடைய முதல் காதல் குறித்து வெளியே சொன்னால் தமிழ்நாடே அதிர்ந்து போகும்' என தெரிவித்து சஸ்பென்ஸ் வைத்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் அவர்.

விஜயகுமாரின் மகள் வனிதா. தன் தந்தையிடமிருந்து அவர் பிரிந்து இருந்தாலும் அவரது பெயருக்கு பின்னால் இன்னும் விஜயகுமார் என்ற வார்த்தை இருக்கத்தான் செய்கிறது. சந்திரலேகா உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த அவர்; திரைத்துறைக்குள் வந்த சில வருடங்களிலேயே திருமணம் செய்துகொண்டார். ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து ஜோவிகாவையும், விஜய் ஸ்ரீ ஹரியையும் பெற்று தாயானார். அவர்கள் இரண்டு பேருமே இப்போது சினிமாவில்தான் இருக்கிறார்கள்.

Vanitha Vijayakumar Clarifies Her First Love Remark Says It Was A Beauthiful Love Story
Photo Credit:

சர்ச்சை என்றால் வனிதாதான்: ஆகாஷை விவாகரத்து செய்துவிட்டு இன்னும் இரண்டு திருமணங்களை செய்த வனிதா; அவற்றிலிருந்தும் வெளியே வந்தார். தந்தையுடன் பிரச்னை, திருமண வாழ்க்கையில் பிரச்னை என தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாதியில் எவிக்ட் ஆனார். மேலும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தையும் இயக்கினார். இது ஒருபக்கம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'என்னுடைய முதல் காதலை பற்றி விவரமாக சொன்னால் தமிழ்நாடு அதிரும்; என கூறினார்.

Also Read
பாக்யராஜுக்கு காதலியாக நடித்த ஆர்த்தி ரவியின் அம்மா.. என்ன படம் தெரியுமா?.. கஸ்தூரி ஓபன் டாக்
பாக்யராஜுக்கு காதலியாக நடித்த ஆர்த்தி ரவியின் அம்மா.. என்ன படம் தெரியுமா?.. கஸ்தூரி ஓபன் டாக்

வனிதா செய்தியாளர் சந்திப்பு: இந்நிலையில் நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய வனிதா, "தமிழ்நாடே விஜய்க்கு வாக்களித்தது. அவர் மீது இருக்கும் காதலால்தான் வாக்களித்தார்கள். விஜய் மீது இருக்கும் காதல் எப்போதும் குறையாது. இன்னும் அதிகம்தான் ஆகும். முதலமைச்சராக நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. அவரை சுற்றி நிறைய நெகட்டிவ் அலை வருகிறது. இருந்தாலும் கடிவாளம் கட்டிய குதிரை மாதிரி விஜய் இருக்கிறார்.

முதல் காதல் பற்றி: சினிமா துறையை சேர்ந்தவர் என்பதால் எங்கள் துறைக்கு நிறைய செய்வார் என எதிர்பார்க்கிறேன். மக்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கும். அவர் தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனது காதலை பற்றி சொன்னால் தமிழ்நாடே அதிரும் என எதார்த்தமாகத்தான் சொன்னேன். ஏனெனில் அது அவ்வளவு அழகான காதல் கதை. ஆனால் அதற்குள் அதை பற்றி யார் யாரோ அவர்களுக்குள்ளேயே எது எதுவோ பேசிக்கொள்கிறார்கள்.

அந்த வசனம்தான்: லவ் ஓ லவ் படத்தில்,'இது எனது முதல் காதல் இல்லை. மொத்த காதலும் இதுதான்' என வசனம் வரும். அப்படித்தான் எனது காதல் கதையும். அந்த உணர்வில்தான் அப்படி சொன்னேன். உடனே இதுதானா அதுதானா என்று நீங்களாக முடிவு செய்துகொண்டால் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதேபோல் 2கே கிட்ஸ் நல்ல பசங்களாகத்தான் இருக்கிறார்கள். இப்போது நிறைய கம்யூனிகேஷன் கேப் வந்துவிட்டது என்று கருதுகிறேன். இப்போது இருக்கும் பசங்க அனைவரும் பொறுப்பாக இருக்கிறார்கள். கடமையை முதலில் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X