சர்கார் ஷூட்டிங்கில் விஜய்க்காக வெளிநாட்டு நபரை அடிக்கப் போன வரலட்சுமி

சென்னை: சர்கார் ஷூட்டிங்கின் போது வெள்ளைக்காரரை அடிக்கப்போனதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

ஒருவிரல் புரட்சியின் முன்னோட்டத்தைப் போல சர்கார் திரைப்படத்தின் ஆடியோ ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது.

Varalakshmi speech in Sarkar movie audio launch

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வரலட்சுமி, ரசிகர்களைப் பார்த்து உங்களைப் போல நானும் தளபதி ரசிகை தான் என உரக்கச் சொன்னார்.

விஜய்க்காக பலரிடம் சண்டை போட்டதாக தெரிவித்த வரலட்சுமி, லாஸ் வேகாஸில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது இடையூறு செய்த வெள்ளைக்காரர் ஒருவரை அடிக்கப் போனதாகவும், அப்போது படக்குழுவினர் சமாதானப்படுத்தியதாகவும் தெரிவித்தார். இப்படத்தில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி படப்பிடிப்பு தளத்திலும் ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார்.

[சர்கார் விழாவில் தர்ம சங்கடத்துக்கு ஆளான விஜய்: இப்படி பண்ணிட்டீங்களே பிரசன்னா]

தொடர்ந்து பேசிய கீர்த்தி சுரேஷ், சர்கார் திரைப்படத்திற்கு முன்பே முருகதாஸ் படத்தில் வாய்ப்பு வந்து தவறவிட்டதாகவும், அப்படி தவறவிட்டது சர்காருக்காக என நினைக்கும் போது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

போக்கிரி பட நூறாவது நாள் விழாவுக்கு கேரளா வந்தபோது விஜய்யை முதன் முதலில் போட்டோ எடுத்ததாகக் கூறிய கீர்த்தி, அப்போது செல்பியெல்லாம் கிடையாது. அன்று அவருடன் போட்டோ எடுத்திருந்தால் அது பொக்கிஷமாக இருந்திருக்கும் எனத் தெரிவித்தார்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X