நூறு சாமி ஹிட்.. சுவாசிகாவுக்கு ஆஸ்கர் விருதாம்.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்.. மேடத்துக்கு செம வெட்கம்
சென்னை: லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஃபேமஸானவர் சுவாசிகா. அந்தப் படத்துக்கு பிறகு கருப்பு படத்தில் ஒரு ரோலை ஏற்றிருந்த அவர்; இப்போது நூறு சாமி திரைப்படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். நேற்று ரிலீஸான அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக, சுவாசிகாவின் நடிப்பு அப்ளாஸை அள்ளிவிட்டது. நிச்சயம் இப்படத்தில் நடித்ததற்காக அவர் விருதுகள் பெறுவார் என்றும் ஆரூடம் கூறுகிறார்கள் ரசிகர்கள்.
கேரளாவை சேர்ந்த சுவாசிகா வைகை படத்தின் மூலம் தமிழில்தான் தன்னுடைய கரியரை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து கோரிப்பாளையம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர்; மலையாளத்தில் பிஸியானார். அங்கேயே ஒருகட்டத்தில் செட்டிலாகிவிட்ட நிலையில்தான்; தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து படத்தில் நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. சுவாசிகாவுக்கு பவர்ஃபுல்லான ரோல் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை அவரும் சிறப்பாக நடித்து மெருகேற்றியிருந்தார்.

சூப்பர் நடிகை: அந்த ஒரு படத்திலேயே, எதார்த்தமான நடிகை, எந்த ரோல் கொடுத்தாலும் ஃபிட் ஆகும் நடிகை என அத்தனை நல்ல பெயர்களையும் பெற்றுவிட்டார். அதன் காரணமாக அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்த கருப்பு படத்தில் ஒரு ரோலை ஏற்றிருந்தார். அதில் அவருக்கு பெரிய ஸ்பேஸ் இல்லையென்றாலும்; ஓரளவுக்கு தேறியது. நாங்க நாலு பேரு பாடலில் அவரது நடனம் படு வைரலானது.
சசியின் நூறு சாமி: இப்போது அவர் சசி இயக்கத்தில் நூறு சாமி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நேற்று வெளியான இந்தப் படம் சூப்பர் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது. பெண்களுக்கு தேவையான கருத்தினை இயக்குநர் சசி எந்த வித அலட்டலும் இல்லாமல்; உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் என கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.குடும்ப ரசிகர்கள் எல்லாம் தியேட்டர்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டார்கள். இதனால் இன்றிலிருந்து அந்தப் படத்தின் ரிசல்ட் மேற்கொண்டு பாசிட்டிவ்வாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாசிகா சூப்பர்: படத்தின் ஹைலைட்டாக இருப்பவர் சுவாசிகாதான். தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கனமான கதாபாத்திரத்தை எந்த வித சிரமமுமின்றி ஜஸ்ட் லைக் தட்டாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்கூட, 'தாய் கிழவி ராதிகாவுக்கும், நூறு சாமி சுவாசிகாவுக்கும்தான் இந்த வருடத்தில் விருதுக்கு போட்டியே' என தெரிவித்திருந்தார். அந்த கருத்தை ஒத்துதான் ரசிகர்களின் கருத்தும் இருக்கிறது.
விஜய் ஆண்டனி சொன்னது: இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் சசி, விஜய் ஆண்டனி, சுவாசிகா ஆகிய மூன்று பேரும் பேசினாரள். அப்போது விஜய், 'இந்தியாவில் ஒரு ஆஸ்கர் விருதை தயாரித்து சுவாசிகாவுக்கு கொடுக்கலாம் என்று இருக்கிறோம். அதற்கு பெயர் இந்திய ஆஸ்கர்' என சொல்லிவிட்டு; செய்தியாளர்களிடம் ஒரு காலி தண்ணீர் பாட்டிலை வாங்கி, 'இதை இப்போதைக்கு ஆஸ்கர் என்று நினைத்துக்கொள்ளுங்கள்' என சொல்லி சுவாசிகாவுக்கு வழங்கினார்.
அதனையடுத்து சசியும், 'சுவாசிகாவுக்கு தேசிய விருது பத்தாது என்று ஒரு பத்திரிகையாளரும் கூறியதாக தெரிவித்தார். இதையெல்லாம் பார்த்தும், கேட்டும் கொண்டிருந்த சுவாசிகாவோ வெட்கத்தில் சிவந்துபோனார். விஜய் ஆண்டனியும், சசியும் சேர்ந்துகொண்டு சுவாசிகாவிடம் செய்த ஃபன் அனைவரையும் ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
