மாதம்பட்டி ரங்கராஜ் தோஸ்த்தை சந்தித்த ஜாய் கிரிஸில்டா.. புயலுக்கு பின் பூத்த பூ.. சூப்பர் நட்பு
சென்னை: பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கும் ரகசியமாக இரண்டாவது திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிரச்னைகள் வெடிக்க; நீதிமன்றம் வரை பஞ்சாயத்து சென்றது. சிந்துபாத் கதை போல் நீண்டுகொண்டே சென்றுக்கொண்டிருந்த அவர்கள் பிரச்னை ஒருவழியாக சில மாதங்களுக்கு முன்புதான் முடிவுக்கு வந்தது.
தமிழ்நாட்டின் டாப் சமையல் கலைஞர்களில் ஒருவர் மாதம்பட்டி ரங்கராஜ். மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். குக் வித் கோமாளியில் நடுவராகவும் பணியாற்றுகிறார். இவருக்கு ஸ்ருதி என்ற மனைவி இருக்கையிலேயே; அவரை விவாகரத்தும் செய்யாமல்; பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமாணம் ரகசியமாக நடத்தப்பட்டது. அப்போதே அவர் கர்ப்பமாகவும் இருந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அவரிடமிருந்து ரங்கராஜ் விலக முயற்சித்ததாக தெரிகிறது.

ஆரம்பித்த பிரச்னை: இதனால் கடுப்பான ஜாய்; காவல் துறையில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர் சந்திப்பையும் நடத்திவிட்டார். அவரது வாயை அடக்க மாதம்பட்டியாரும் என்னெல்லாமோ செய்து பார்த்தார். ம்ஹும் ஒன்றும் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதேசமயம் கிரிஸில்டாவின் போராட்ட குணமும், அவரது உறுதித்தன்மையும் நாளுக்கு நாள் இறுகி பலம் பெற்றுக்கொண்டே சென்றது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி ரங்கராஜுக்கு செக் வைத்தார்.
டி.என்.ஏ சோதனை: இந்த சமயத்தில் ஜாய்க்கு குழந்தை வேறு பிறந்துவிட்டதால்; ரங்கராஜுக்கு மேற்கொண்டு நெருக்கடி. இப்படிப்பட்ட சூழலில்தான், 'பிறந்திருக்கும் குழந்தை என்னுடையதுதான் என்று டிஎன்ஏ டெஸ்ட்டில் நிரூபித்தால் நான் இவர்களை ஏற்றுக்கொள்ள தயார்' என கூறினார். அப்படி சொல்லியவர் பல மாதங்கள் அந்த பரிசோதனைக்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் தேர் நிலைக்கு வந்துதானே ஆக வேண்டும் என்பதுபோல் சோதனைக்கு சென்றார்.
மாதம்பட்டிக்கு செக் மேட்: அந்த பரிசோதனையின் முடிவில், பிறந்திருக்கும் குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையதுதான் என்பது உறுதியானது. இதனால் அவருக்கு செக் மேட்டும் வைக்கப்பட்டுவிட்டது. முடிவு இப்படி வந்துவிட்டதால்; அவர்களை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துவிட்டார். இப்போது அவர்கள் சுமூகமாக இருப்பதாகவே தெரிகிறது. ஜாய் கிரிஸில்டாவும் மகிழ்ச்சியோடு பொதுவெளிகளில் வலம் வர தொடங்கியிருக்கிறார். பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்தையும் கூறிவருகிறார்கள்.
மாதம்பட்டி தோஸ்த்துடன்: இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மிக மிக நெருக்கமான செஃப் தாமுவை ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் எதேச்சையாக சந்தித்தார். அப்போது தாமுவிடம் உடல்நலம் குறித்து விசாரித்த அவர்; சாப்பிட வருமாறும் அழைத்தார். அப்படியே இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை பார்த்த ரசிகர்கள், கணவரின் தோஸ்த்துக்கு நல்ல மரியாதையை ஜாய் கொடுக்கிறார் சூப்பர் என்று கமெண்ட்ஸ் செய்து அந்த வீடியோவை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications
